உன்னத சங்கீதம்

 

 

Notes on Skiing and Zen Buddhism என்ற என்னுடைய நாவலை எழுதுவதன் நிமித்தமாக அப்போது நான் இமயமலையில் அலைந்து கொண்டிருந்தேன். லஹெளல் ஸ்பித்தியிலிருந்து கிளம்பி திபெத் சென்று, மீண்டும் லஹெளல் ஸ்பித்திக்கே திரும்பிக் கொண்டிருந்தேன். வழித்துணையாக வந்தவள் காமினி. இமாசல பிரதேசத்தின் பூர்வகுடியைச் சேர்ந்தவள். கூடவே கஸான்ஸாகிஸின் புத்தகங்கள். இது பற்றி இந்தக் கதையில் இவ்வளவுதான் சொல்ல முடியும். மற்ற விவரங்கள் அனைத்தையும் Note s இல் பார்ப்போம். ஆனால் அந்தப் பயணத்தில் நான் சந்தித்த ஒருவரைப் பற்றி இங்கே குறிப்பிட வேண்டியுள்ளது. ஏதோ ஒரு மடாலயத்தை நோக்கி கால் நடையாகச் சென்று கொண்டிருந்தார் அந்த புத்த பிக்கு. சில தினங்கள் நாங்களும் அவருடனே பயணம் செய்ய நேர்ந்தபோது ஓய்வுக்காக ஒரு இடத்தில் முகாமிட்டோம்.

ஒரு நாள் மதியப் பொழுது . திக்குத் திசையே காண முடியாதபடி எல்லையற்றுப் பரந்து விரிந்திருந்தது பனிப்பாலை. எனக்குள் வாக்னரின் Rhine Journey ஒலித்துக் கொண்டிருந்தது. பெருக்கெடுத்தோடும் காட்டாற்று வெள்ளமாய் என் நாடி நரம்புகளிலெல்லாம் பரவிப் பெருகி ஓடிய அந்த இசையினூடே ‘ ஏலீ! ஏலீ! லாமா சபக்தானி ’ என்ற கதறல் ஒலி கேட்டது. திடுக்கிட்டு கண்களைத் திறந்தேன். பக்கத்தில் நின்று கொண்டிருந்தார் புத்தபிக்கு.

“ ஏன் ஐயா , கடவுள் நிஜமாகிலும் உண்டா ? ” எனக் கேட்டேன்.

“ குருல்லோ சிந்து கியனுவ ” என்றார் பிக்கு.

பொருள் ?

புன்சிரிப்பே பதிலாக வந்தது.

சென்னைக்குத் திரும்பிய பிறகு நான் பணிபுரியும் பத்திரிகை , நேரடிச் செய்திகளை சேகரிப்பதற்காக என்னைக் கொழும்புக்கு அனுப்பியது. அங்கே சிங்கள மொழி காதில் விழுந்தபோது அந்த புத்த பிக்கு சொன்ன வார்த்தைகள் மனதில் அலைந்தன. ஒரு சக சிங்களப் பத்திரிகையாளரிடம் அவ்வார்த்தைகளின் பொருளைக் கேட்டேன்.

” குயில் பாடிக் கொண்டிருக்கிறது “ என்றார்.

பொருள் தெரிந்த பிறகு குழப்பம் மேலும் அதிகமாகியது. இதற்கும் கடவுளுக்கும் என்ன சம்பந்தம் ? அந்த பிக்குவின் பெயரைக்கூட தெரிந்து வைத்துக் கொள்ளாமல் போனோமே என்று நொந்து கொண்டேன். அதன் பிறகு எனது அன்றாட அலுவல் மும்முரத்தில் இதை மறந்து போனேன்.

என் பணியின் ஒரு கட்டமாக, சிங்கள ஜாதி அமைப்புகளைப் பற்றி ஓரளவேனும் தகவல் சேகரிப்பதாக இருந்தது. அதன் பொருட்டு கொழும்பு பல்கலைக் கழகத்தின் சமூகவியல் பேராசிரியர் திரு. டயஸ் பண்டாரநாயக அவர்களைச் சந்தித்தேன். சிங்கள சமூகத்தில் தமிழர்களைப் போல் அவ்வளவு இறுக்கமான சாதியக் கட்டுமானமோ படிநிலைகளோ ஒடுக்குமுறையோ இல்லை என்று கூறி விரிவாக விளக்கினார் பேராசிரியர். (எனக்கு பீகார் , உத்தரப்பிரதேசம் போன்ற வட இந்திய மாநிலங்களின் நிலைமை ஞாபகம் வந்தது).

அதற்கு முக்கியமான காரணம் பௌத்தம் என்றும் கூறினார். அப்போது திபெத்தில் நான் சந்தித்த புத்தபிக்குவைப் பற்றிச் சொல்லி, அவரிடம் நான் கடவுள் பற்றிக் கேட்டதற்கு அவர் சொன்ன பதிலையும் சொன்னேன். ஒருக்கணம் அவர் தன் இருக்கையை விட்டு எழுந்து வந்து என் தோள்களைப் பற்றி , “ நீங்கள் சொல்வது நிஜம்தானா ?” எனக் கேட்டார். அவர் உடலே பதறிக் கொண்டிருந்தது.

” அந்த பிக்குவின் பெயர் ? ”

“ தெரியாது “ என்றேன்.

திரும்பச் சென்று தன் இருக்கையில் அமர்ந்த பேராசிரியர் நீண்டதொரு பெருமூச்சு விட்டு , “ அவன் நிச்சயமாக யோன்கொத்தலாவல தான் ” என்றார்.

நான் ஒன்றும் சொல்லாமல் மிகுந்த ஆச்சரியத்துடன் அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

“ அவனும் நானும் எங்கள் இளவயதில் யேசு சபையில் ஊழியர்களாக இருந்தோம். அப்போது ஒரு பிரசங்கத்தின்போது அவன் ஒருகதை சொன்னான்.

முன்னொரு காலத்தில் குயில்களுக்கு இவ்வளவு இனிமையான குரல் இருந்ததில்லை. அவைகளுக்கு அப்போது பாடவும் தெரியாதிருந்தது. பேச மட்டுமே தெரியும். இரண்டொரு வார்த்தைகள். குரலோ காகத்தை விடவும் மயில்களை விடவும் மோசமாயிருந்தது. தாகமெடுத்தவன் விக்கல் கொண்டு கேவுவதைப் போன்ற கர்ண கடூரமான குரல். அப்போது ஒரு நாள் குயில்கள் யேசு சிலுவையில் அறையப்படும் சங்கதியை நாரைகளின் மூலம் கேள்வியுற்று கொல்கொதா மலைக்குச் சென்றன. அங்கே யேசு சிலுவையில் அறையப்பட்டு கிடக்கிறார். அப்போது அந்த இடத்திலே உட்கார்ந்து அவரைக் காவல் காத்துக் கொண்டிருந்தவர்களும், அவருடைய வலது பக்கமும் இடது பக்கமும் அவரோடே கூட சிலுவையில் அறையப்பட்ட ரெண்டு திருடர்களும் , அந்த வழியாய் நடந்து போகிறவர்களும் , பிரதான ஆசாரியரும் வேத பாரகரும் , மூப்பரும் , தன்னை தேவனுடைய குமாரனென்று சொல்லி , தேவன் மேல் நம்பிக்கையாயிருந்தானே , அவர் இவன் மேல் பிரியமாயிருந்தால் இப்பொழுது இவனை ரட்சிக்கட்டும் “ என்று சொல்லி பரிகாசம் பண்ணி நிந்தித்ததைக் கண்டு அந்தக் குயில்கள் ஆத்மவாதை கொண்டன. அப்போது ஒன்பதாம் மணி நேரத்தில் யேசு ” ஏலி!ஏலி! லாமா சபக்தானி “ என்று மகா சத்தமாய்க் கூப்பிட்டு ஆவியை விட்டதைக் கண்டன அந்தக் குயில்கள். அவைகளுக்கு யேசுவின் அந்தக் கடைசி வார்த்தைகளின் அர்த்தம் விளங்கவில்லை. இருந்தாலும் அதே வார்த்தைகளை அவை திரும்பச் சொன்னபோது அவ்வார்த்தைகள் அவற்றின் குரலிலிருந்து சங்கீதமாய் வெளிப்படுமாறு கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டன. யேசுவின் அந்த இறுதி வார்த்தைகளை அவை இன்றும் சங்கீதமாய் இசைத்துக் கொண்டிருக்கின்றன.

குருல்லோ சிந்து கியனுவ.........

அதற்குப் பிறகு நடந்தது எங்கள் தேசத்தின் சோக வரலாறு. அது உங்களுக்குத் தெரியும். இந்தத் தீவில் நடந்ததே யோனின் குடும்பத்திலும் நடந்தது. அவனுடைய தாயாரும் தங்கையும் தமிழ் வீரர்களால் இவன் கண்ணெதிரிலேயே கொல்லப்பட்டார்கள். அவன் மனைவி கர்ப்பிணியாக இருந்தாள். இந்திய வீரர்கள் ஏழெட்டு பேர் அவளைச் சிதைத்தார்கள்.

அதற்குப் பிறகு யோன் ராணுவத்தில் சேர்ந்தான். தமிழ்க் கிராமங்களை அழித்தான். தமிழர்களைப் பூண்டோடு அழித்துக் கொல்லுவேன் என்று வெறிகொண்டு அலைந்தான். யேசு சபை ஊழியன் என்றே நம்ப முடியாதபடிக்கு மாறிப் போனான். நான் ஊழியத்தை விட்டுவிட்டு பல்கலைக்கழக உத்தியோகத்தில் சேர்ந்தேன். இடையில் சில ஆண்டுகள் நாங்கள் சந்தித்துக் கொள்ளவேயில்லை. கடைசியில் நான் அவனைச் சந்தித்தபோது அவன் ராணுவத்திலிருந்தும் விலக்கம் பெற்றிருந்தான். ஏனென்று கேட்டபோது சொன்னான்.

தமிழ்ப் போராளிகளைத் தேடிக்கொண்டு கிளிவெட்டி என்ற கிராமத்திற்குச் சென்றிருக்கிறது அவனுடைய ராணுவப்பிரிவு. ஆனால் அந்த சிங்கள சிப்பாய்கள் யாருமே எதிர்பார்த்திராத ஒரு சோகமான ஆச்சரியம் அந்தக் கிரமத்தில் அவர்களுக்கு காணக் கிடைத்திருக்கிறது.

அந்தக் கிராமத்தில் அத்தனை பேருமே விதவைகளாயிருக்கக் கண்டது அந்தச் சிங்கள ராணுவம். இருந்த ஆடவர்கள் ஒன்றிரண்டு பேரும் கிழவர்கள். கிட்டத்தட்ட இருநூறு விதவைகள். அதற்கும் மேலே கூட இருக்கலாம். அதில் ஒரு பெண் இவனுடைய தங்கையுடன் படித்த கல்லூரித் தோழி. அவளால் யோனை அடையாளம் கூடக் கண்டுகொள்ள முடியவில்லை. அது மட்டுமல்ல , பேசக்கூட முடியாதபடிக்கு புத்தி பேதலித்தவளாக இருந்திருக்கிறாள். எத்தனை சிங்களச் சிப்பாய்களால் குதறப் பட்டதோ அந்த உடம்பு!

” சிங்களராவது தமிழராவது என்று ஓடி வந்து விட்டேன் ” என்றான் யோன் கொத்தலாவல.

“எங்கே போகிறாய்? ” என்று கேட்டேன்.

” திட்டமில்லை ” என்றான்.

எவ்வளவோ தேடினேன். இப்போது நீங்கள் சொல்லித் தெரிகிறது.

*******

 

( இத்தாலியில் உள்ள சிதைந்து போன நகரமான POMPEII - இல் கண்டெடுக்கப்பட்ட ஓவியங்கள். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வரையப்பட்டவை )

யோன் கொத்தலாவல என்ற அந்த புத்த பிக்குவுக்கும் முன்னால் எனக்குக் குயிலின் சங்கீதத்தை அறிமுகப்படுத்தியவன் ஜோன்ஸ். எத்தனையோ சப்தங்கள் செவியில் விழுந்து கொண்டிருக்கின்றன. ஆனால் நாம் அவற்றைச் சந்திப்பதில்லை. பிரக்ஞையின் வழியாக அவைகளை அடையாளப்படுத்திக் கொள்வதில்லை.

இவ்வாறே குயிலின் சங்கீதத்தையும் எத்தனையோ ஆண்டுகளாக அடையாளம் தெரிந்து கொள்ளாமல் இருந்திருக்கிறேன். ஒரு நாள் தொலைபேசியில் குயிலைப் போல் பாடியே கண்பித்தான் ஜோன்ஸ்.

மற்றொரு நாள் சொன்னான் “குயிலின் சங்கீதம் எனக்கு போகச் சிலிர்ப்பை ஏற்படுத்துகிறது. உன்னைக் கலவி கொள்வது போல் உணர்கிறேன். என் தேகமே யோனியாக விரிந்து உன்னை உள்வாங்கிக் கொள்கிறது. ஆணென்றும் பெண்ணென்றும் பாகுபடுத்தி வைத்திருப்பது எனக்கு வேடிக்கையாக இருக்கிறது சாரு. செக்ஸ் என்பது அடிப்படையில் என்ன ? நரம்பின் துடிப்பு. வேறென்ன ? மண்புழுக்களின் செக்ஸ் பற்றியோ எறும்புகளின் செக்ஸ் பற்றியோ யோசித்துப் பார்... ”

**********

தில்லியிருந்து நான் சென்னைக்கு மாற்றல் வாங்கிக்கொண்டு வந்த பிறகு கிடைத்த சந்திப்பு -டாக்டர் ஜோன்ஸ். குழந்தை மருத்துவர். என்றாலும் வீட்டுக்குப் பக்கத்தில் இருந்ததால் ஒருமுறை நான் சுகவீனம் அடைந்த போது அவரிடம் சென்றேன். ஜோன்ஸுக்கு நாற்பது வயது இருக்கும். ஆனால் முதல் சந்திப்பிலேயே இப்படி ஒரு ஆச்சரியம் நடக்குமா என்ன ?

ஸ்டெத்தை என் மார்பில் வைக்கும்போதே அவருடைய ஒரு கால் எனது கால்களுக்கு இடையே நுழைந்து என் குறியை உரசிக்கொண்டு நின்றது. திடீரென்று எனது உடலின் மைய இழையைச் சுண்டிவிட்டது போல் ஒரு சிலிர்ப்பு. என் முகத்தில் அவருடைய உஷ்ணமான மூச்சுக்காற்று சீறியது. தடையேதும் சொல்லாமல் ஆர்வத்தின் விளிம்பில் அமர்ந்திருந்தேன். என்குறி மீது லேசாக ஊர்ந்தது அவர் கை. மேலும் கீழுமாய்த் தடவிப் பார்த்துவிட்டு திருப்தியுடன் சென்று கதவைத் தாளிட்டார். அணை உடைந்தாற் போல் என்னை வெறியுடன் தழுவி முத்தமிட்டார். கடவுளே.... என்ன ஒரு அழுத்தமான முத்தம்! வாழ்நாள் முழுவதும் இந்தக் கணத்திற்காகவே காத்திருந்தாற் போலொரு முத்தம். காமக்கிளர்ச்சி என் தேகத்தின் ஒவ்வொரு அணுவிலும் பரவித் தெறித்துக் கொண்டிருந்தது. இருவரும் சுய உணர்வு பெற்று விலகிய போது உதடுகள் வலித்தன.

” கொஞ்சம் வெயிட் பண்ண முடியுமா ? ” என்றார். வெளியே வந்து வந்து அமர்ந்தேன். என் தேகம் முழுவதும் துடித்துக் கொண்டிருந்தது.

சிறிது நேரத்தில் அங்கு குழந்தைகளுடன் காத்திருந்த ஓரிரு பெண்கள் சென்று வந்த பிறகு ஜோன்ஸ் என்னை உள்ளே வரும்படி சமிக்ஞை செய்தார். நான் பேண்ட்டின் ஜிப்பைக் கழற்றி குறியை மட்டும் வெளியே எடுத்து விட்டுக் கொண்டு அறைக்குள் நுழைந்தேன். என்னுடைய அந்தத் தோற்றம் எனக்கே சுவாரசியமாக இருந்தது. சின்ன வயதில் நிக்கரில் பட்டன்கள் கழன்று போய் குஞ்சு மட்டும் வெளியே தெரிய பெண்களின் நையாண்டிக்கு ஆளான சம்பவங்கள் ஞாபகம் வந்தன. ஆனால் பிறகு வேண்டுமென்றே பட்டன்களை அறுத்து எறிந்துவிட ஆரம்பித்தேன். என் குஞ்சை வைத்து வயதுப் பெண்கள் கேலி பேசுவதை ரசித்தேன். அப்போது எனக்கு நான்கு வயது இருக்கும். பெண்களுடனான எனது முதல் செக்ஸ் உறவாக அதைத்தான் நினைக்கத் தோன்றுகிறது.

அறைக் கதவைத் தாளிட்டு விட்டு ஓடிவந்து என் குறியைச் சுவைக்க ஆரம்பித்தார் ஜோன்ஸ். ஸ்கலிதமாகி விடுமோ எனத் தோன்றிய நிலையில் , இது பாதியில் முடிந்து விடக் கூடாதென்ற ஆர்வத்தில் அவர் வாயை உறுப்பிலிருந்து நீக்கினேன். பிறகு என் உடைகளைக் களைந்தார். பக்கத்தில் நோயாளிகளைச் சோதிக்க வைத்திருக்கும் உயரமான பெஞ்சில் என்னைக் குப்புறப்படுக்க வைத்தார் (குறி உடைந்து விடாமல் இருக்க சந்றே என் புட்டத்தை உயர்த்திக் கொள்ள வேண்டியிருந்தது). தன்னுடைய ஆடைகளையும் களைந்து விட்டு என்மேல் பரவி புட்டப் புழையில் தன் குறியைச் செலுத்த முனைந்தார் டாக்டர் ஜோன்ஸ். முடியவில்லை. முயற்சியைக் கைவிட்டு வெளியிலேயே வைத்து மேலும் கீழுமாய் இயக்கி..... அதிகம் விவரிக்க வேண்டியதில்லை என்று நினைக்கிறேன்.

ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் அவன் வீட்டு மாடியில் சந்தித்துக் கொண்டோம். (அதற்குள் ஒருமையில் அழைத்துக் கொள்ளும் அளவு எங்கள் உறவு பலப்பட்டிருந்தது). ஜோன்ஸ் விவாகரத்து ஆனவன். மனைவி வேறு யாரையோ மணந்து கொண்டு அமெரிக்கா போய் விட்டாள். மகள் கிறிஸ்டினா ஜோன்ஸுடன் இருக்கிறாள். எட்டாம் வகுப்பு படிக்கிறாள். சமையல் , வீட்டு வேலை , கிறிஸ்டினாவை கவனித்துக் கொள்வது எல்லாம் ஜோன்ஸின் அம்மா.

ஒருநாள் என்னை அவன் மாடியிலுள்ள குளியலறைக்கு அழைத்துச் சென்றான். ஓடிப் பிடித்து விளையாடலாம் என்ற அளவுக்கு விசாலமாகக் கிடந்தது அந்தக் குளியலறை. எனது ஆடைகளைக் கழற்றிவிட்டு தானும் நிர்வாணமானான். ஷவரைத் திறந்ததும் பூத்துளிகளின் சில்லிப்பில் உடல் சிலிர்க்க என்னை இறுகக் கட்டியணைத்தபடி வாயில் முத்தமிட்டான். நாக்கை வாய்க்குள் விட்டுத் துழாவினான். அவன் எச்சில் எனக்குள் பிரவாகமாய் ஓடியது. ஷவரின் வேகத்தை அதிகரித்தான். அருவி கொட்டியது. இருவரும் ஒருவரேயாகி விடுவோமோ என்றபடி அதே நிலையில் எவ்வளவு நேரம் இருந்தேன் என்றே தெரியவில்லை. தண்ணீரின் சில்லிப்பு குறைந்து போனதாய்த் தோன்றியது. பிறகு என்னைக் குளியல் தொட்டிக்குள் விட்டு என்மீது படர்ந்தான் ஜோன்ஸ். மூச்சே நின்று விடும் போல் அணைத்துக் கொண்டான். கொஞ்சம் தளர்த்தினாலும் பிரிந்து விடுவோமோ என்று பயந்தது போல் இருந்தது அவன் அணைப்பு. திடீரென்று என்னை தொட்டியின் இருக்கையில் அமரச் செய்து என் குறியைச் சுவைத்தான். என் நாடி நரம்புகளிலெல்லாம் கிளர்ந்து ஓடியது பரவசச் சிலிர்ப்பு. உண்மையில் ஜோன்ஸின் குறியையே நான் சுவைத்துக் கொண்டிருந்தேன். அமர்ந்திருந்தது அவன். மச்ச கன்னிகையாய் நீரில் கிடந்தபடி அவனை எனக்குள் ஆவிர்ப்பவித்துக் கொண்டிருந்தேன்........

ஜோன்ஸின் குறி என் புழையில் நுழைவது கடினமாக இருந்ததால் விளக்கெண்ணையை இடது கை சுட்டு விரலில் தடவி புழைக்குள் வட்டமாகச் சுழற்றிச் சுழற்றி விட்டு துவாரத்தை லகுவாக்கிக் கொண்டேன். ஆனால் புட்டப் புணர்ச்சியில் நான் ஈடுபடுவதில் எனக்கு விருப்பமில்லாதிருந்தது. ஜோன்ஸின் வாயே ஒரு கை தேர்ந்த யோனியாய் என்னை உள்வாங்கிக் கொண்டிருந்தது.

ஜோன்ஸின் குறி சவலைக் குழந்தையாய் இளைத்தே கிடந்தாலும் அவன் தேகம் முழுவதும் பரவிக் கிடந்தன பாலியல் ரேகைகள். ஒவ்வொரு அணுக்காம்பிலும் காமதாகம் கொண்டிருந்தான் அவன். எங்கே தொட்டாலும் கிளர்ச்சியடைந்தான். மார்புக் காம்புகளை சுவைக்கச் சொல்வான். சுவைத்தால் உச்சகட்டமே வந்துவிட்டது போல் சிலிர்ப்படைந்தான். எனக்கு அப்படியில்லை; செக்ஸ் என்பதே குறி , வாய் என்பதாகச் சில இடங்களில் மட்டுமே மையமாகிக் கிடந்தது.....