வனம் பற்றி

 

சாரு,

நான் வனம் பற்றிக் கேட்ட கேள்விக்குப் பதில் வரும் என நிச்சயமாக எண்ணினேன். ஆனால், இவ்வளவு அற்புதமான ஒரு பதிவாய் வரும் என எண்ண வில்லை.

ஏன் சாரு, உன்னிடம் நேரில் மட்டும் பேசி விட்டு உன் எழுத்தை ஒருவன் படித்தால், எழுதுயது நீ என்று சத்தியம் செய்துதான் அவனை நம்ப வைக்க வேண்டும்.

நீ கூறியது போல் நீ எழுதும்போது, உன் மூலம் அழகிய இலக்கிய ரசனை கொண்ட ஒரு புலப்படாத 'சக்திதான்' எழுதுகிறதோ?

அதுவும், நேற்று "சரோஜா " பார்க்கப் போன போது திரை அரங்கில் இருளில், என் கால் பிசகி நடக்க முடியாமல் உடல் வலியுடனும், சின்ன பணச் சிக்கலால் மன வலியுடனும் அலுவலகம் வந்த எனக்கு அந்தப் பதில் நீயே என் காது அருகில் வந்து ஆறுதல் சொன்ன மாதிரி இருந்தது.

நன்றி சாரு.

ஆதுரத்துடன்
சூர்யா.