மிடில்கிளாஸ் கேனயர்களை அடையாளம் காண ஒரு டஜன் வழிகள்
1. பனியன் போட்டிருப்பவன்.
2. ஹமாம் சோப் தேய்ப்பவன்.
3. சட்டைப் பையில் நீலக்கலர் மூடி தெரியும்படி ரெனால்ட் பேனா வைத்திருப்பவன்.
4. பெல்ட்டில் உறை போட்டு செல்போன் வைத்திருப்பவன்.
5. டிசம்பர் கடைசியில் டைரி, காலண்டர் கிடைக்குமா என பார்ப்பவரிடம் எல்லாம் கேட்பவன்.
6. சலூனில் கைகளை உயர்த்தி கக்கம் சிரைக்கச் சொல்பவன்.
7. பைக்கின் சைடில் பெட்டி வைத்திருப்பவன்.
8. பிஸ்லரி தண்ணீர் தீர்ந்ததும் பாட்டிலை மறக்காமல் வீட்டுக்கு எடுத்து வருபவன்.
9. ரிமோட்டுக்கு பிளாஸ்டிக் கவர் போட்டு வைத்திருப்பவன்.
10. 50 கட்டுரை எழுதியதற்கு எல்லாம் புளகாங்கிதம் அடைந்து பதிவு போடுபவன்.
11. அதற்கு உருகி உருகி பின்னூட்டம் இடுபவன்.
12. என் மகன் எஸ்எஸ்எல்சியில் 405 மார்க் என்று எஸ்எம்எஸ் அனுப்புபவன்.
மிடில் கிளாஸ் கேணச்சிகளை அடையாளம் காண ஒரு டஜன் வழிகள்:
1. சிக்னலில் நிற்கும்போது ஸ்கூட்டி இன்ஜினை ஆப் செய்பவள்.
2. கோயில் சிதறு தேங்காயை காலை சட்னிக்கு உபயோகிப்பவள்.
3. தன் பிறந்தநாளுக்கு ஐபாட் பரிசு வாங்கி, அதை வாங்கித் தந்தவன் பிறந்தநாளுக்கு யாஹூ மெயிலில் கார்டு அனுப்புபவள்.
4. அட்சய திரிதியைக்கு ஜி.ஆர். தங்கமாளிகையில் கால்பவுன் மோதிரம் வாங்குபவள்.
5. பாண்ட்ஸ் பவுடர் பூசுபவள்.
6. சினிமா இடைவேளையில் பாப்கார்னும் கோன் ஐஸும் மறக்காமல் கேட்பவள்.
7. போத்தீஸில் 800 ரூபாய்க்கு சுடிதாரும் ரங்கநாதன் தெருவீதியில் பத்து ரூபாய்க்கு மூணு பேண்டிஸும் வாங்குபவள்.
8. ஆண் நண்பர்களுடன் பைக்கில் போகும்போது ஹேண்ட்பேக் இன்னபிற வஸ்துக்களால் நடுவில் தடுப்பரண் அமைப்பவள்.
9. இளநீர் வாங்கி தண்ணீர் குடித்தே வயிறு நிரம்பினால், தேங்காய் விள்ளல்களை பொட்டலம் கட்டச் சொல்பவள்.
10. ஸ்டிக்கர் பொட்டு பாக்கெட்டை கைப்பையில் வைத்திருப்பவள்.
11. வீட்ல இருக்கும்போது போன் பண்ணாதீங்க ஆத்தா வய்யும் என்பவள்.
12. கன்னத்தில் மட்டும் முத்தம் இடுபவள்.
மேற்கண்டவற்றைப் படிக்கும் போது உங்களுக்கு என்ன தோன்றுகிறது? உங்களுக்கு என்ன தோன்றுகிறதோ, எனக்குத் தோன்றுவது என்னவென்றால், யாரோ ஒரு ஆள் என்னுடைய ‘க்ளோன்’ மாதிரி எழுத்துலகில் தலைமறைவாக இயங்குகிறான் என்பதுதான். ஆள் யார் என்று தெரியவில்லை.

சரி, மரியாதை கொடுத்துப் பேசுவோம். என்னுடைய ‘க்ளோன்’ மாதிரி எழுதும் இந்த அன்பரின் புனைப்பெயர் – இல்லை, பொய்ப் பெயர்- பொய்யன்! சூப்பர் உடான்ஸ் என்ற வலைத்தளத்தில்தான் இப்படியெல்லாம் எழுதி ரகளை பண்ணிக் கொண்டிருக்கிறார் பொய்யன். பொய்யனைப் பற்றி வேறு எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. எனக்குத் தெரிந்தவர்களிடமெல்லாம் கேட்டுப் பார்த்து விட்டேன். ஆள் யார் என்று கண்டு பிடிக்க முடியவில்லை.
பகடி செய்வதில் மனிதர் பின்னி எடுக்கிறார். பொதுவாக ப்ளாக்கில் எழுதுபவர்கள் எந்தப் பொறுப்புணர்வும் இல்லாத அரை வேக்காடுகள் என்பது என்னுடைய அபிப்பிராயம். என் நண்பர் சீனிவாசன் வேறு மாதிரி சொல்லுகிறார்: அதாவது, ”டாஸ்மாக் கடையில் ஓல்ட் மாங்க் அடித்து விட்டு ரோட்டில் நின்று கொண்டு வாய் கிழிய அரசியல் பேசுவார்களே, அந்த மாதிரி ஆட்கள் இந்த ப்ளாக்குகளில் எழுதுபவர்கள்...”
சீனிவாசன் சொல்வதில் எனக்குத் துளிக்கூட உடன்பாடு இல்லை. டாஸ்மாக்கில் குடிப்பவர்களாவது தங்கள் சொந்தப் பணத்தில் குடிக்கிறார்கள். பிளாக்கில் எழுதுபவர்கள் ஓசியில் ....பவர்கள். பிளாக்கை மட்டுமே படிப்பவர்கள் சீக்கிரம் மெண்டல் ஆவதற்கும் வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. சில பிளாக்குகளின் பின்னூட்டம் என்ற பகுதியைப் படித்தாலே அது உங்களுக்குப் புரிந்து போகும். பல ப்ளாக்குகள் தமிழ்நாட்டின் பஸ் ஸ்டாண்டுகளில் இருக்கும் பொது கக்கூஸ்களைப் போல் நாறுகின்றன.
நான் எல்லா ப்ளாக்குகளையும் கூறவில்லை. நல்ல ப்ளாக்குகளும் உள்ளன. அவைகளைப் பற்றி அவ்வப்போது நான் அறிமுகப்படுத்தி வருவதையும் நீங்கள் அறிவீர்கள்.
சக ப்ளாக்குகளை பொய்யன் கிண்டலடிக்கும் பாங்கைப் பாருங்கள்:
”டோண்டு ராகவனிடம் இரண்டு கேள்விகள்:
வலையுலகின் புதியவனான எனக்கு ஆச்சர்யமாக இருக்கிறது. சொல்லப்போனால் கவனிக்கக்கூட மறந்துவிட்டேன். ஆம். நான் ஐம்பது பதிவுகளுக்கும் அதிகமாக எழுதியிருக்கிறேன். இது 54வது பதிவு. மிக நெகிழ்வாக இருக்கிறது. முதல் பதிவு என்ற ஒற்றை வரியோடு என் முதல் பதிவை எழுதினேன். அது பல அர்த்த விரிவுகளுக்கு இட்டுச் சென்றதாக பல நண்பர்கள் கூறினர். இந்த ஐம்பது பதிவு கால இடைவெளியிலே எவ்வளவோ நிகழ்வுகள். திரும்பிப் பார்க்கும்போது மலைப்பாக இருக்கிறது. இவ்வளவு செய்திருக்கிறோமோ என்று என்னையே வியந்துகொள்ள முடிகிறது. அதே நேரத்தில் பொறுப்பும் அதிகரித்து இருக்கிறது என்பதையும் உணர்ந்தே இருக்கிறேன்.
என் பதிவுகளிலேயே எனக்குப் பிடித்த பதிவு என்று சுட்டிக் காட்டச் சொன்னால் இரு பதிவுகளை குறிப்பிடுவேன். ஒருமுறை தமிழ்மணம் திறந்து பலர் பதிவுகளைப் படித்தே நள்ளிரவு ஆகிவிட்டது. மிக தூக்கமாக வந்தது. எனவே தூக்கம் வருகிறது தூங்க போகிறேன் என்று ஒரு பதிவிட்டேன். அதற்கு ஒரு அனானி குட்நைட் என்று பின்னூட்டம் இட்டார். அந்த அன்பில் உண்மையிலே கரைந்து போனேன். மற்றொரு அன்பர் விதேச பாஷையில் பின்னூட்டி நலம் விசாரித்தார். ஒரு பிளாக்கராக இருப்பதன் விழுமியத்தை நான் அறிந்த தருணம் அது. மற்றொரு பதிவு ரிமைண்டர். பொதுவாக ஒரு நாளில் நான் செய்ய உத்தேசித்துள்ள வேலைகளை எனது மொபைல் போனில் குறித்து வைப்பது வழக்கம். அப் பதிவிட்ட சமயம் என் மொபைல் சார்ஜரில் இருந்தது. எனவே ரிமைண்டரை ஒரு பதிவாகவே வெளியிட்டேன். உலகத் தமிழர்கள் அனைவரும் அதை படித்து அறிந்தார்கள் என்பதே நான் ஒரு வலைப்பதிவாளனாக இருப்பதன் அர்த்தத்தை எனக்கு விளக்கியது.
இந்த ஐம்பதாம் பதிவு கொண்டாட்டத்தை ஒட்டி, நெடுநாளாக என் மனத்தில் இருப்பதை வெளியிட துணிபு கொண்டுள்ளேன். வெகுமூத்த பதிவரான டோண்டு ராகவனிடம் இரண்டு கேள்விகள் கேட்க வேண்டும் என நான் வலையுலகுக்கு வந்த காலத்தில் இருந்தே நினைத்து வருகிறேன். ஆனால் மிக ஜுனியரான நான் எப்படி அதைக் கேட்பது என்று இயல்பிலேயே என்னுள் உள்ள தயக்கமும் சங்கோஜமும் என்னை தடுத்துவந்தது. ஒருமுறை என் பதிவில் பின்னூட்டிய டோண்டு அவர்கள் கட் அண்ட் பேஸ்ட் செய்யும் நுட்பம் குறித்து சொல்லியிருந்தார். அப்போதுகூட கேட்க நினைத்து விட்டுவிட்டேன். ஆனால் ஐம்பது பதிவுகள் கடந்த நிலையில் வலையுலகில் எனக்கும் ஒரு நிரந்தர இடம் கிடைத்த தன்னம்பிக்கையோடு
டோண்டு ராகவனிடம் என் கேள்விகளை முன்வைக்கிறேன்.
கேள்வி நெ.1 : கம்ப்யூட்டர் துடைப்பதற்காக வைத்திருக்கும் மஞ்சள் துணியை நன்றாக விரித்துவைத்துதான் துடைக்க வேண்டுமா? மடக்கிய நிலையிலேயே துடைக்கலாமா?
கேள்வி நெ.2 : ஒருமுறை ஷட்டவுன் செய்யாமல் அப்படியே சுவிட்சை ஆப் செய்துவிட்டேன். இதனால் கம்ப்யூட்டருக்கு கெடுதி ஏதும் உணடா?
சுஜாதா மெக்ஸிகோ சலவைக்காரி ஜோக் என்ற ஒன்றைப் பற்றி 50 ஆண்டுகளாகப் பிரஸ்தாபித்து விட்டுக் கடைசி வரை அது என்ன என்று சொல்லாமலேயே நம்மையெல்லாம் தவிக்க விட்டு விட்டுப் போய் விட்டார் அல்லவா? இப்போது அந்த ஜோக்கை பொய்யன் சொல்கிறார், கேட்போம்.
மெக்சிகோவில் ஒரு சலவைக்காரி இருந்தாள். செம கட்டை. எப்போதும் ஆற்றில் கருமமே கண்ணாக துவைத்துக் கொண்டிருப்பாள். அவளது அழகில் மயங்கி பலபேர் பின்பக்கமாக வந்து ஜோலியை முடித்துச் சென்று விடுவார்கள். அவள் மறுப்பேதும் சொல்வதில்லை. ஒரு நாள் ஆறு பேர் இப்படி முடித்துச் சென்றதுமே பக்கத்தில் இருந்த கழுதைக்கும் ஆசை வந்துவிட்டது. அதுவும் போய் முடித்தது. அப்போது சலவைக்காரி சொன்னாளாம். அந்த ஏழாவது ஆள் மறுபடியும் வாங்க.
பொய்யனின் ப்ளாக் முகவரி இது:http://superudans.blogspot.com/
ப்ளாக்குகளைப் பற்றி விமர்சித்து எழுதியிருப்பதால் எனக்கு ஆபாசக் கடிதம் எழுதித் திட்ட விரும்பும் அன்பர்களுக்கு என் மின்னஞ்சல் முகவரி: charunivedita@charuonline.com
* * *
25.9.2008.
4.30 p.m.