திரு. சாரு,
வணக்கங்கள் -
உங்கள் கிழக்கு பதிப்பகத்தின் மொட்டை மாடி கட்டுரை படித்தேன். ராய் இசை பற்றி அறிந்தேன். ஏ. ஆர். ரகுமானின் டாக்ஸி டாக்ஸி பாடலைத் தான் நீங்கள் குறிப்பிடுகிறீர்கள் என்று நினைக்கிறேன். தமிழ் எழுத்தாளர்கள் பிரபல நாளிதழ்களில் அறிமுகமாக வேண்டும் என்பது நியாமான கோரிக்கையே. ஏன் தமிழகத்தில் அதிகம் விற்கும் ஹிந்து ஆங்கில இதழ் அதனை செய்யவில்லை என்று தெரியவில்லை.
புனைவு கதைகளால் மக்கள் மொய்கிறார்கள் என்பதில் ஆச்சரியமில்லை. அவரவருக்கு அவரவர் எழுத்தாளர் என்ற எண்ணம். அந்த பல கோடி ஐடியா நல்லாவே இருக்கு.
****
சமீபத்தில் கீற்று இணையதளத்தை 'நான் படித்ததில் பிடித்தது' என்று அறிவித்துள்ளீர்கள். இதில் எனக்கு சில எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசை.
1. பாரதியை பிராமணர் என்ற ஒரே காரணத்துக்காகவே கட்டம் கட்டி அசிங்க படுத்தும் வே.மதிமாறனின் கட்டுரைகள் தொடந்து வெளிவரும் தளம் அது. இதில் நீங்கள் அசோகமித்திரன் போன்ற எழுத்தாளர்களின் இந்து அதீத கொள்கையுடன் ஒப்பிட்டு எழுதியுள்ளீர்கள். இது சரியான ஒப்பீடாக தெரியவில்லை.
அவர்கள், பாரதி ஒரு பிராமணன் என்ற ஒரே காரணத்திற்காகவே திட்டமிட்டுத் தாக்குகிறார்கள். இவர்களின் ஆய்வு கூர்கள் எல்லாம் கண் துடைப்பே. இதில் அரசியல் உண்டு மெய்கள் அறிது. இந்த பக்கத்திற்கு சென்று http://www.keetru.com/literature/essays/ 'பாரதி' என்று தேடுங்கள். ஒரு கட்டுரைக் கூட காழ்புணர்வைத் தாண்டி இருக்காது.
2. சுஜாதா மரணமடைந்தை கொண்டாடிய தளம் கீற்று http://www.keetru.com/literature/essays/suguna_diwakar_7.php
3. ஞாநி குமுதத்தில் சேர்ந்தற்காக கீற்றின் நந்தன் எழுதும் தாக்குதல் http://www.keetru.com/literature/essays/nandhan.php
இவ்வாறு எவர் பிராமணராக இருந்தாலும் அவர்களைத் தாக்கும் இந்த இணைய தளத்திற்கு உங்கள் ஆதரவு ஏன் என்பது புரியவில்லை. சாதி காழ்ப்பை மட்டுமே பரப்பும் இந்த தளத்திற்கு வேண்டாம் ஆதரவு!
அன்புடன்,
ஒரு வாசகன்