குட்டிக் கதைகள் நூற்றியெட்டு (48)

 

 

பெருமாள் ஜெஸ்ஸியிடம் சொன்னான்: ” உன்னைப் பார்ப்பதற்காகவே என் கண்களை மூடுகிறேன். ”

“ஏன்? கண்களைத் திறந்து அல்லவா பார்க்க வேண்டும்? ”

“ஏய் நாய்க்குட்டி, உறக்கம் தவிர மற்றபடி கண்களை எப்போது மூடுவார்கள், சொல்? ”

“ம்ம்ம்....தெரியவில்லையே? ”

“முட்டாள்...கடவுளை நினைக்கும் போதுதான் மனிதர்கள் கண்களை மூடுவார்கள்... ”

இதைக் கேட்டு விட்டு பல முறை ‘ ஓ, மை காட்! ’ , ‘ஓ, மை காட்! ’ என்று அரற்றிக் கொண்டிருந்தாள் ஜெஸிந்தா. ” உங்கள் காதலை என்னால் தாங்கிக் கொள்ள முடியுமா என்று தெரியவில்லை பெருமாள்...பட், ஐ லவ் யூ... ”

இந்த சம்பாஷணையை அலெக்ஸிடம் சொன்னான் பெருமாள். உடனே அலெக்ஸ் “இது என்ன பா. விஜய் கவிதை மாதிரி இருக்கு? ” என்றான் .

“ ஆஹா, மாட்டினாய் இன்று ” என்று கும்மாளக் குதியாட்டம் போட்டான் பெருமாள். ஏனென்றால், அந்த வாசகம் Paul Gauguin -ஆல் சொல்லப் பட்டது!

9.9.2008.

2.00 p.m.