இரண்டு தினங்களுக்கு முன்பு கதீட்ரல் சாலையிலுள்ள அஷ்விதா என்ற காஃபி ஷாப்பில் ஜெஸ்ஸியைச் சந்தித்தான் பெருமாள். கல்லூரி செல்லும் அவசரத்தில் ” ஒரு அரை மணி நேரம் உங்களைப் பார்த்து விட்டுப் போய் விடுகிறேன் ” என்று சொல்லி விட்டு வந்திருந்தாள். காதலர்கள் அந்தரங்கமாகச் சந்திக்க ஏதுவான ஒரு காஃபி ஷாப் அது. மணி அப்போது மதியம் பனிரண்டரை. What happens in Vegas என்ற படத்திற்காக ஒரு மணிக்கு பெருமாளை சத்யம் தியேட்டருக்கு வரச் சொல்லியிருந்தான் காமேஸ்வரன். அதைப் பற்றியெல்லாம் இப்போது என்ன கவலை? ஜெஸ்ஸிதான் முக்கியம். பெருஅவளை விட வேறு எதுவும் பிரதானம் இல்லை.
அந்த கஃபேவை பெருமாளுக்கு அறிமுகப் படுத்தியவன் நாராயண். அது இருந்த இடமே ஒரு மாதிரி ஒதுக்குப்புறமாக, காதலர்கள் அந்தரங்கமாக அமர்ந்து ‘பேசிக் ’ கொண்டிருக்கும் வகையில் வடிவைமைக்கப் பட்டிருந்தது. நாராயணும் பெருமாளும் உள்ளே நுழைந்த போது தம்மை மறந்த நிலையில் முத்தமிட்டுக் கொண்டிருந்த இரண்டு ஜோடிகள், இவர்கள் வந்த அரவத்தில் அவசரமாகப் பிரிந்ததைப் பார்க்க நேர்ந்தது. இதுதான் தோதான இடம் என்று அப்போதே முடிவு செய்து விட்டான் பெருமாள்.
பெருமாள் ஜெஸ்ஸியோடு சென்ற நேரம் நல்ல நேரம். அன்றைய தினம் அங்கே கூட்டமே இல்லை. அந்த விசாலமான அறையில் அவர்கள் இருவர் மட்டுமே இருந்தனர். இரண்டு ‘ கப்பூச்சினோ ’ வுக்கு ஆர்டர் கொடுத்தான். இனிமேல் ‘பேரர் ’ வர குறைந்த பட்சம் 10 நிமிடமாகும். ஜெஸ்ஸியை முத்தமிட நெருங்கினான் .அவளோ பேய் பிசாசைக் கண்டது போல் நகர்ந்து ஓடினாள்.
பெருமாளுக்கு யாரோ மண்டையில் ஓங்கித் தாக்கியது போல் இருந்தது. உடனே தன்னைப் பின்னுக்கு இழுத்துக் கொண்டான். இனிமேல் இந்த நாயிடம் யார் நெருங்குவார்? அதற்கு மேல் அவனுக்கு அங்கே இருக்கப் பிடிக்கவில்லை. அவளும் முதலில் ‘ இன்று கல்லூரிக்குப் போக வேண்டாம் என்று நினைக்கிறேன் ’ என்று சொல்லிக் கொண்டிருந்தவள், நேரம் ஆக ஆக ‘எதற்கு அநாவசியமாக க்ளாஸை கட் அடிக்க வேண்டும், கிளம்புகிறேன் ’ என்றாள்.
“கிளம்பு, கிளம்பு ” என்று அசுவாரசியமாகச் சொல்லிக் கொண்டே பெருமாளும் எழுந்தான்.
பெருமாள் சத்யம் தியேட்டரை அடைந்த போது மணி 1.15. பரபரப்புடன் நின்று கொண்டிருந்தான் காமேஸ்.
அது ஒரு உருப்படாத பாக்யராஜ் பாணி படம். தியேட்டரில் இருந்தவர்கள் விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருந்தார்கள்.
இந்தப் பெண்களுக்கு எங்கிருந்துதான் இப்படி ஒரு மோப்ப சக்தி கிடைக்கிறதோ தெரியவில்லை. நாய்களுக்கு அடுத்தபடியாக பெண்களுக்குத்தான் மோப்ப சக்தி அதிகம். இருக்கையில் வந்து அமர்ந்ததுமே “கோபமா? ” என்று குறுஞ்செய்தி வந்தது. பெருமாள் எதுவும் பதில் கொடுக்கவில்லை. மறுபடியும் மறுபடியும் குறுஞ்செய்திகளை அனுப்பிக் கொண்டேயிருந்தாள்.
“நான் யார் உன் மீது கோபப்பட? இனிமேல் என் தரப்பிலிருந்து உனக்கு எந்தத் தொந்தரவும் இருக்காது. உன் வாழ்வில் இனி நான் குறுக்கிடவே மாட்டேன் நீ இனி உன்னிஷ்டம் போல் இருந்து கொள்ளலாம் “ என்று ஒரு மெஸேஜை அனுப்பி வைத்தான்.
அப்போது பெருமாளுக்குத் தோன்றிய எண்ணமெல்லாம் இதுதான்: இவள் ஒரு சிறு பெண். இவளை ஏன் தொந்தரவு செய்ய வேண்டும்? இப்படியே இவளிடமிருந்து பிரிந்து விட்டால் இவள் வருங்காலத்தில் வேறு யாரையாவது பார்த்து மணந்து கொள்ளலாம். நம்முடைய சுயநலத்தால் இவளுடைய வாழ்க்கை பிரச்சினையாகி விடக் கூடாது.
மட்டுமல்லாமல் ஜெஸ்ஸி இந்தக் காலத்துப் பெண்களைப் போல் இல்லை. ஒருவேளை, முத்தம் கொடுத்தால் குழந்தை பிறந்து விடும் என்று கூட நினைத்துக் கொண்டிருக்கலாம். அவ்வளவு வெகுளி. ஒரு ‘ஏ ’ ஜோக் சொன்னால் கூட ஜோக் முடிந்த பிறகும் ‘ம் ’ கொட்டிக் கொண்டிருப்பாள். .
ஆனால் அவள் விடுவதாக இல்லை. விடாமல் மெஸேஜை அடித்துத் தள்ளிக் கொண்டேயிருந்தாள்.
“ஏன் இப்படி என்னைச் சித்ரவதை செய்கிறீர்கள்? ”
” உங்களைப் பற்றி எனக்குத் தெரிந்து விட்டது. உங்களுக்கு அந்த பானு, நந்தினி போன்றவர்கள்தான் முக்கியம். என்னை முழுப் பைத்தியமாக்கி விட்டு இப்போது ‘ இனிமேல் தொந்தரவு செய்ய மாட்டேன் ’ என்கிறீர்கள். ஓகே. உங்கள் இஷ்டப்படி செய்யுங்கள்... ”
அந்த மெஸேஜையே பார்த்துக் கொண்டிருந்தான் பெருமாள். ஆனால் பதில் அனுப்பவில்லை அவனுடைய வாழ்க்கை முழுவதும் ஒரு பாறாங்கல்லாய் மாறி அவனுடைய முதுகில் ஏறிக் குந்திக் கொண்டு அவனை அழுத்தியது.
எத்தனை பெண்கள். எத்தனை வார்த்தைகள். ஆனால் ஏன் அத்தனை பேரும் ஒரே வார்த்தைகளையே பேசுகிறார்கள்? உயிர் உனக்கு; உடல் கணவனுக்கு! புல் ஷிட்...என்னடா வாழ்க்கை இது. அவனோடு பத்து ஆண்டுகள் வாழ்ந்த ஒரு பெண், அவனோடு ஒரு குழந்தையும் பெற்றுக் கொண்டவள் அவனுக்கு ஒரு முத்தம் கூடக் கொடுத்ததில்லை; அது கூட வேண்டாம். அவனையும் முத்தம் தரச் சம்மதித்ததில்லை என்று சொன்னால் இந்த அலெக்ஸ் பயல் கூட நம்புவானா என்று தெரியவில்லை. ஒருத்தரும் நம்ப மாட்டார்கள். அவனுக்குத் தெரியும். அதை விடுங்கள். அவனுடைய வாழ்க்கையில் இரண்டாவதாக நுழைந்த மீராவும் முத்தத்திற்கு சம்மதித்ததில்லை. வாய்வழிப் புணர்ச்சி கூட உண்டு. ஆனால் இந்த முத்த எழவுக்கு மட்டும் அனுமதி இல்லை. வெளியே சொன்னால் வெட்கக்கேடு. இப்போது இந்த ஜெஸ்ஸியும் அதே மாதிரி நடந்து கொண்டால் அவனுக்கு எப்படி இருக்கும்?
“உங்களுக்கு என்னிடமிருந்து என்ன வேண்டுமோ அதையெல்லாம் எடுத்துக் கொள்ளுங்கள். நான் உங்கள் உடைமை. உங்கள் அடிமை. என்னிடம் நீங்கள் எதுவுமே கேட்க வேண்டாம். தயவு செய்து தயவு செய்து தயவு செய்து தயவு செய்து மெஸேஜ் பண்ணுங்கள்... ”
இதற்கும் பதில் அனுப்பவில்லை.
“என்னால் வாய் விட்டு அழக்கூட முடியவில்லை. வகுப்பு நடந்து கொண்டிருக்கிறது. வெடித்து அழுது விடுவேன் போலிருக்கிறது. இதயத்தை யாரோ பிடித்து அழுத்தி நசுக்குவது போல் இருக்கிறது. வலி தாங்க முடியவில்லை. கைகால்கள் நடுங்குகின்றன. ரொம்ப நேரமாகக் குனிந்த படியே அழுது கொண்டிருக்கிறேன். பக்கத்தில் உள்ள பெண்களுக்கெல்லாம் தெரிந்து விட்டது. உங்கள் காலைப் பிடித்து கெஞ்சுகிறேன்...என்னைக் கொல்லாதீர்கள்.. நீங்கள் இப்படி இருந்தால் நான் செத்துப்போய் விடுவேன்... ”
இதைப் படித்ததும் பெருமாள் பதறி விட்டான். அரங்கத்தை விட்டு வெளியே வந்து போனில் தொடர்பு கொண்டான். “மேம் பார்த்து விடுவார்கள்; பிறகு பேசுகிறேன். மெஸேஜ் பண்ணுங்கள் ” என்றாள்.
“ஹனி...உன்னைத் துன்புறுத்துவது என் நோக்கமல்ல; நான் எப்போதுமே உன் அடிமைதான். அழாதே...உன் மீது நான் கொண்டிருக்கும் தீவிர காதல்தான் அப்படி என்னை எழுதச் செய்தது. தயவுசெய்து புரிந்து கொள்... ”
“நன்றாகவே புரிந்தது. நான் இவ்வளவு தூரம் கெஞ்சியிருக்கவில்லை என்றால் நீங்கள் என்னை விட்டு விலகியிருப்பீர்கள்தானே? நான் உங்களிடம் என்ன சொன்னேன்? உங்களைப் பிரிந்து என்னால் வாழ முடியாது என்று சொன்னேனா இல்லையா? இப்போது நீங்கள் தன்னிச்சையாகப் பிரிந்து போகிறேன் என்று சொன்னால் நான் சாவதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்? சொல்லுங்கள்... ”
உடனே பெருமாள் உன் காலில் விழுகிறேன், கையில் விழுகிறேன் என்று தன்னுடைய வழக்கமான மெஸேஜ்களை அவளுக்கு அனுப்பத் துவங்கினான். அதோடு ஊடலுக்குப் பின் கூடல் என்றபடி பலவிதமான கூடல் மெஸேஜ்களை அனுப்பி வைத்தான் அந்தச் சமயத்தில்தான் இதற்கு மேலும் ஜெஸ்ஸி தொலைபேசியில் பேசிக் கொண்டும், மெஸேஜ் அனுப்பிக் கொண்டும் இருந்தால் ஆபத்து என்று அவளுடைய பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்த ரோஷினி அவளுடைய தொலைபேசியை வாங்கிக் கொண்டிருக்கிறாள். அந்தத் தருணத்தில் பெருமாள் அனுப்பியிருந்த மெஸேஜ் “நான் உன்னுடைய புஸ்ஸியைத் தின்ன விரும்புகிறேன் ”
இது நடந்து முடிந்த மறுநாள் வழக்கம் போல் நாகேஸ்வர ராவ் பூங்காவில் ஆலமரத்தின் அடியில் தனது சுருதிப் பெட்டியுடன் அமர்ந்து பயிற்சியில் ஈடுபட்டிருந்த காமேஸ்வரனை தனது ஏழு சுற்று நடைப் பயிற்சி முடிந்ததும் சந்தித்தான் பெருமாள். கே.வி.என்னின் மாணவன் காமேஸ்வரன் சங்கீதத்தில் விற்பன்னன். ” இரண்டு மணி நேரத்துக்கு அப்படி என்னய்யா மெஸேஜ்? யார் அந்தப் பெண் இந்த அளவுக்கு உம்மைப் படுத்துவது? ” என்று பெருமாளைக் கேட்டான் காமேஸ்.
* * *
18.9.2008.
11.30 a.m.