உன்னைப் பற்றி படு செக்ஷுவலாக – உன்னோடு பல நிலைகளில் கலவி கொள்வது போல் - கற்பனைக் கொடி கட்டிப் பறக்கிறது. இருந்தாலும் உனக்கு தேக அசௌகரியம் என்பதால் அந்தக் கற்பனைகளையெல்லாம் தூக்கி ஓரத்தில் போட்டு விட்டு உன்னை ஒரு குழந்தையைப் போல் ஏந்திக் கொள்கிறேன். நீ இப்போது என் குழந்தை. உன்னை, உன் தேக வலி தீர என் விரல்களால் இதமாக வருடி விடுகிறேன். உன் தலைமுடியைக் கோதி விடுகிறேன். ஒரு இசைக் கலைஞனின் விரல்களினூடாக வரும் சங்கீதத்தைப் போல் என் ஆத்மாவின் தாலாட்டு என் விரல்களின் வழியே உன் தேகத்தில் படர்ந்து உன்னை ஆசுவாசப்படுத்துகிறதா, என் கண்ணே...
பெருமாள் ஜெஸ்ஸிக்கு அனுப்பிய இந்தக் குறுஞ்செய்திக்கு அவளிடமிருந்து இரவு பத்து மணி அளவில் ஒரு பதில் வந்தது.
அந்த பதிலை யாருடனாவது பகிர்ந்து கொள்ள வேண்டும் போல் இருந்ததால் அலெக்ஸுக்கு அனுப்பி வைத்தான் பெருமாள். உடனே அலெக்ஸ் “ தனியாகக் குடித்துக் கொண்டிருக்கிறேன். இந்த மாதிரி மெஸேஜ் அனுப்பி என்னை இன்னும் அதிகமாகக் குடிக்க வைக்காதே... ”
ஜெஸ்ஸி அனுப்பிய அந்தப் பிரஸ்தாபக் குறுஞ்செய்தி இதுதான்: “இனிமேல் எந்தக் காலத்திலும் என்னால் உங்களைப் பிரிந்து வாழ முடியும் என்று தோன்றவில்லை. எதிர்காலத்தில் ஏதாவது அசம்பாவிதம் நடந்தாலும் – நடக்காது; இருந்தாலும் ஒரு பேச்சுக்குச் சொல்கிறேன் – என்னால் உங்களைப் பிரிய முடியாது. அதே போல், என் வாழ்வில் இன்னொரு ஆடவன் வந்தாலும் உங்களுடன் இருந்த – இல்லை, இல்லை, இருக்கும் – அளவுக்கு நான் யாருடனும் நெருக்கமாக இருக்க மாட்டேன்... ”
* * *
13.9.2008.
9.00 a.m.