நீதிமணியின் மகன் வினய் வாசனின் மடியில் வந்து அமர்ந்த போது சொன்னான்: “என்ன மாமா இது, உன் குஞ்சு என்னுடையதை விட பெருசா இருக்கு?” அவன் இதைச் சொன்ன போது நீதியின் குடும்பத்தினர் அனைவரும் இருந்தனர். வாசனுக்கு மிகவும் வெட்கமாகப் போய் விட்டது. உடனே வினயின் கையையும் தன் கையையும் ஒப்பிட்டுக் காண்பித்து இப்படித்தான் பெரியவர்களுக்கும் சின்னவர்களுக்கும் ஒவ்வொரு உறுப்பும் வித்தியாசமாக இருக்கும் என்று விளக்கினான.
ஒருநாள் வினய் தன் வகுப்பு ஆசிரியையிடம் சொன்னான்: ”என் குஞ்சை விட எங்கள் அப்பா குஞ்சு பெருசு!”
இந்த விஷயத்தை டீச்சர் தன் கணவனிடம் சொல்ல கணவன் நீதிக்கு நண்பன் என்பதால் “இதையெல்லாம் நீ ஏன்டா உன் பிள்ளையிடம் காண்பிக்கிறாய்?” என்று கேட்டானாம்.
***
2.9.2008.
11.00 a.m.