வணக்கம் திரு. சாரு நிவேதிதா - உங்களின் இணைய தளத்தை நான் இரண்டு வாரங்களாகத் தான் படித்து வருகிறேன். அப்படி ஒரு நாள் படிக்கலாம் என்று வரும் பொழுது தளம் காணாமல்
போய் ஒரு அழகிய பெண்ணின் படம் காணக் கண்டேன் ஒரு வேளை ஹொஸ்டிங் சந்தா செலுத்த மறுந்துட்டாங்களோ என்றுநினைத்தேன்.
பிறகு உங்கள் முக்கிய செய்தியைக் கண்டேன். தமிழ் இணையம் இன்று ஒரு குட்டிப் பாப்பா போன்றதே. இதில் பணம் கொடுத்து படிக்கும் அளவுக்கு யாருக்கும் இன்னும் விருப்பம் வரவில்லை.
முதலில் நல்ல இணைய தள மார்கெட்டிங் டீம் ஒன்றைத் தேடிப் பிடியுங்கள். அவர்கள் உங்கள் தளத்தை பிரபல படுத்துவதுடன் பல நல்ல விளம்பரங்களும் பெற்றுத் தருவார்கள்.இணையத்தில் எழுதுவதை வியாபார நோக்கில் நீங்கள் பார்க்க வேண்டும் என்பது என் கருத்து.
இணையத்தில் எழுதி வெளியிட , தள மேளாண்மை செய்ய தங்கவேல் உதவுகிறார் என்று புரிகிறது. ஆனால் விளம்பரங்களை நாம் தேடிச் செல்ல வேண்டும். தானாக வரவே வராது. எவ்வளவு பிரபலமாக இருந்தாலும். உங்களுக்குத் தேவை மார்கெட்டிங் டீம் - இந்த டீம் இணைய விளம்பரத்தில் சாதித்திருக்க வேண்டும். There is a difference between a person who knows how to maintain a website and a sales man (Marketer). குமுதம் தளத்தில் விளம்பரம் செய்ய என்ன விலை என்பது இந்த சுட்டி விளக்கும் http://www.kumudam.com/advertising.php?type=adtariff. இது போன்று நீஙகளும் விலைப் பட்டியல் வெளியிடலாம்.
CAS முறைப் போன்றதே சந்தா கட்டி படி என்பது. பல நிறுவனங்கள் சந்தாவால் தோற்கவே செய்கின்றன. உதாரணம் விகடன் இணைய தளம் என்னைக் கேட்டால் www.kumudham.com தளத்தைப் போல நடத்தலாம். www.tamilmatrimony.com என்ற நிருவனம் எல்லா நல்ல தமிழ் தளங்களில் விளம்பரம் செய்கின்றார்கள். பெரும்பாலும் இளைய வாசகர்களை ஈர்க்கும் உங்கள் தளம், 3 லட்சம் ஹிட் பெற்றும், நல்லி புடவைகளின் விளம்பரம் மட்டுமே உங்கள் தளத்தில் காண இயல்கிறது.
வாசகர்கள் இரண்டு முறை மூன்று முறை வரை உங்கள் வேண்டுகோளுக்கு இனங்க முப்பது டாலர் கட்டினாலும் அது சஸ்டெய்னபிள் யுக்தியாகத் தெரியவில்லை. 30*30 விட நீஙகள் பல மடங்கு பணம் பார்க்கலாம். தயவு செய்து விளம்பர யுக்தியை முன் கொணருங்கள்.
நல்ல கொட்டை எழுத்துகளில் விளம்பரம் செய்ய எங்களை அனுகவும் என்று ஏன் போடவில்லை? ஏன் தொலைப்பேசி எண் தரவில்லை? மின் அஞ்சல் என்பது impersonal medium. விளம்பரதாரர்கள் கொடுக்கும் பணத்திற்கு உங்கள் தளம் என்ன தர முடியும் என்றும் கணக்குக் காட்டினால் கூடுதல் நலம்.
உதாரணமாக ஆண்கள் அதிகம் படிக்கிறார்களா அல்ல பெண்களா? எந்த வயதிற்கு உட்பட்டவர்கள் படிக்கின்றனர். எந்தெந்த நாடுகளில் படிக்கின்றனர். எத்துனை distinct பயனர்கள் வருகின்றனர். போன்ற செய்திகளை நோட்டீஸ் போல அடித்து நிருவனங்களை அனுகலாம். என் பணி எழுத்து மட்டும் என்று நினைத்தால் விளம்பர டீமிடம் இதனைக் கொடுங்கள். இவ்வாறு கணக்குக் காட்ட Google Analytics உதவும். இது ஒரு இலவச சேவை.
முதலில் இந்த அடிப்படை விஷயங்களை சரி பார்க்கலாம். உடனே எல்லாம் சரியாகிவிடும் என்று சொல்ல முடியாது. உஙகள் எழுத்து பணி போன்றே விளம்பரம் தேடுதலும் ஒரு தவம்.
பிராணவாயுவிற்கு இப்பொழுது வாசகர்கள் உதவலாம் ஆனால் நெடும் பயணத்திற்கு விளம்பர வருமானமே சரி!
உணர்ச்சி வசப் படாமல் நிதர்சன உண்மைகளை அறிந்து இங்குள்ள சிலவற்றை ஆலோசிப்பீற்கள் என்று நம்புகிறேன்.
இலவச அலோசனைக்கு மன்னிக்கவும்.
அன்புடன்
ஒரு வாசகன்.