அய்யம்பாளையமும் , பாலஸ்தீனமும்

 

இரண்டு நாள் க்ரோஸின் போட்டு ஓட்டினாள். ஜுரம் நிற்கவில்லை. சில்லறைக் காசுகளைப் பீராய்ந்து எடுத்துக்கொண்டு சாயிரம ண னிடம் ஓடினோம் .

எலி ஜுரமா , சாதா ஜுரமா என்று பார்க்கவேண்டும் என்று பல சோதனைகளை எழுதிக் கொடுத்தார் அவர். சோத னை ச் சாலைக்குச் சென்றோம். 2000 என்றார்கள்.

'' சரி , செய்யுங்கள் '' என்றாள் அவந்திகா. '' பணத்துக்கு எங்கே போவது ?'' என்று கிசுகிசுத்தேன். '' பேசாமல் இரு '' என்பது போல் அபய † ஸ்தம் காட்டினாள்.
வீட்டுக்கு வந்தோம்

இத்தனை பிரச்சினைக்கிடையில் நடந்த வேறு சில வேடிக்கைச் சம்பவங்களையும் இங்கே சொல்லவேண்டும். உங்கள் இணைய தளத்தில் எழுத்தெல்லாம் மூட்டை மூட்டையாக வருகிறது என்று போன் செய்தார் பௌத்த அய்யனார். என்னடா இது புதுக்குழப்பம் ? ஒரு வேளை அவருடைய பௌத்தத் தலையைத் தான் கண்ணாடியில் பார்த்திருப்பாரோ என்று நினைத்தேன்.

இடையில் , திருச்சியிலிருந்து வினிதா என்ற தோழியிடமிருந்து ஒருகுறுஞ்செய்தி வந்தது. Do You remember the graph? என்று. க்ராப் விவகாரம் என்னவென்றால் & நட்பில் ஆரம்ப கட்டம் படு உற்சாகமாக இருக்குமாம். பிறகு போகப் போக கட்டெறும்பாகி விடுமாம் கழுதை . அதைபோல் , ஆரம்பத்தில் படு சுள்ளாப்பாக இருந்த நமது நட்பு இப்போது இப்படி ஆகி விட்டதே ?
அதாவது , நான் கடந்த ஒரு மாத காலமாக யாருடனும் பேசவில்லை , குறுஞ்செய்தி அனுப்பவில்லை. காரணம் , சுஜாதா.

ஒரு லட்சம் பக்கங்கள் எழுதியிருப்பாரா சுஜாதா ? அதில் ஒரு 2000 பக்கத்தையாவது படித்து இந்த மாதத்திற்குள்ளாகவே எழுதி விடவேண்டும் என்று அவருடைய கணையாழி கடைசிப்பக்கங்கள் உள்ளிட்ட சில நூல்களை பரீட்சைக்குப் படிப்பது போல் ராப்பகலாகப் படித்துக்கொண்டிருந்தேன். அதற்கிடையில் தான் அவரது மரணச் செய்தி வந்து சேர்ந்தது. இதனால் எனக்கு அதிர்ச்சியோடு துக்கமும் கூடி இன்னும் வேகமாகப் படித்து எழுத ஆரம்பித்தேன். அவந்திகா ஜுரமாகிப் படுக்கையில் கிடந்தபோது கூட நான் ஜுர வேகத்தில் எழுதிக் கொண்டுதான் இருந்தேன். ஒருநாள் குளித்து விட்டு வந்து வேஷ்டி மாற்றிக்கொள்ளவும் பொறுமையின்றி டவலுடனேயே அமர்ந்து எழுதிக் கொண்டிருந்தேன். இதைப்பார்த்த அவந்திகா த ன்னை யாராவது பேட்டி கண்டால் இதை நிச்சயம் சொல்வேன் என்று கூறி விட்டுச் சிரித்துக் கொண்டே எழுந்து போய் வேஷ்டியை எடுத்துக் வந்து கொடுத்தாள். அப்படி எடுக்கப் போன போது , வேஷ்டியை எடுத்துக் கட்டிக் கொள்ளக்கூட சோம்பேறித்தனமா ? என்று கேட்டதற்காக   சோம்பேறித்தனம் என்ற வார்த்தையைக் கடுமையாக ஆட்சேபித்து வேஷ்டியைக் கட்டிக் கொள்ளமாட்டேன் என்று சிறிது நேரம் சத்யாகிரகம் செய்தேன். ம்ஹூம் பலிக்கவில்லை.

இவ்விஷயத்தைச் சற்று கடுமையான தொனியில் வினிதாவுக்கு குறுஞ்செய்தியாகக் அனுப்பினேன். நான் வேண்டுமானால் பணத்துக்கு ஏற்பாடு செய்யவா ? என்று பதில் குறுஞ்செய்தி வந்தது. '' நோ ''.

'' சரி , பணத்துக்கு என்ன ஏற்பாடு ?'' என்று அவந்திகாவிடம் கேட்டபோது வழக்கம் போல் கழுத்திலிருந்ததைக் கழற்றினாள். '' என்ன இது ?'' என்று பதறினேன்.
'' இது வெறும் ஒரு ஆபரணம். அவ்வளவுதான். சமூகத்துக்காகவே இதை அணிந்திருக்கிறேன். எடுத்துப் போய் விற்றுக் கொண்டு வா '' என்றாள்.
சிலம்பின் ஞாபகம் வர , '' எனக்கும் ஒன்றும் தாலி சென்டிமென்டெல்லாம் இல்லை கண்மணி. ஆனாலும் , 12 ஆண்டுகளுக்கு முன்னால் உனக்காக   நான் வாங்கிக் கொடுத்த முதல் பரிசுப் பொருளாயிற்றே என்று பார்க்கிறேன் '' என்றேன்.
'' பேசிப் பயனில்லை. பரிசோதனைக்கு ரத்தம் கொடுத்தாயிற்று. எடுத்துக்கொண்டு போ ''.
அந்த நேரம் பார்த்துத்தான் மும்பை சூர்யா தொலைபேசியில் வந்து , '' நேற்று விஜய் டிவியில் நீங்கள் வந்ததை ஏன் சொல்லவில்லை ?'' என்று கேட்டார்.
'' நான் ஒரு தலை போகிற பிரச்சினையில் இருக்கிறேன் , பிறகு பேசுகிறேன் ''.
'' என்ன பிரச்சினை ?''
'' எழுதுவேன். ''

இதுவாவது பரவாயில்லை , அப்போது வந்த வேறொரு தகவல்தான் ரகளையோ ரகளை. மதுரையில் ஒரு தங்க விற்பனையாளர் உள்ளார். ' தங்க ' என்பது பெயருரிச்சொல் அல்ல. பெயர்ச் சொல். அதாவது , தங்கம் விற்பனை செய்பவர். அவரது நெருங்கிய நண்பர் ஒருவர் எனது நெருங்கிய நண்பர். மக்கள் இப்போது அதிக அளவில் ஆபரணங்கள் வாங்குவதால் அந்தத் தங்க வர்த்தகருக்கு தங்கம் கிடைக்காமல் நெருக்கடியோ நெருக்கடி. எனக்குக் கொஞ்சம் பிரபலங்களுடன் பழக்கம் என்பதால் சென்னையில் யாராவது தங்க விநியோகஸ்தர் மூலம் தினமும் தங்கம் வாங்கித் தர முடியுமா ? நண்பர் 2 கோடியை கையில் வைத்துக் கொண்டு அலைந்து கொண்டிருக்கிறார். ராஸ லீலா சி மேட்டரெல்லாம் கிடையாது. பக்காவான , சட்ட ரீதியான வர்த்தகம். எனக்கும் கமிஷன் கிடைக்கும்.
இதுபற்றி நிக்கியிடம் பேசிக்கொண்டே , '' தாலியை நான் மட்டும் எடுத்துக் சென்றால் திருடிக் கொண்டு வருவதாகச் சொல்லுவார் சேட். நீயும் கூட வா '' என்றேன் அவந்திகாவிடம்.

 
 
 
 
 
 
next