சாருநிவேதிதா அவர்களுக்கு வணக்கம்!
நான் ஒரு மொக்கை வலைப்பதிவு எழுதி வருகிறேன். இன்று காலை திடீரென்று என்
வலைப்பதிவில் ஒரே கூட்டம். இத்தனைக்கும் நான் ஒரு பதிவு கூட போடவில்லை.
கிட்டத்தட்ட ஆயிரம் பேர் காலை பத்து மணியிலிருந்து பண்ணிரண்டு மணிக்குள்ளாக என் வலைப்பூவுக்கு வந்து போயிருக்கிறார்கள். என்ன பிரச்சினை என்பது தெரியாமல் குழம்பிவிட்டேன்.
பின்னர் தான் தெரிந்தது எனது http://madippakkam.blogspot.com என்ற வலைப்பூவின் முகவரியை தங்களது இணையத்தளத்தில் ஒரு கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறீர்கள் என்று. சும்மா ஒரு சின்ன லிங்க் உங்கள் இணையத்தளத்தில் வந்ததற்கே என்னுடைய வலைப்பூ அதிருது. நிச்சயமாக ஒவ்வொருநாளும் தங்களது வலைப்பூவை பல்லாயிரக்கணக்கானவர்கள் வாசிப்பார்கள் என்று நம்புகிறேன். இவ்வளவு ஆயிரம் பேர் வாசிக்கும் இணையத்தளத்துக்கு நீங்கள் விளம்பரம் கேட்டும் போதிய ரெஸ்பான்ஸ் இல்லை என்பது வருந்தத்தக்கது. நிச்சயமாக இதனால் இழப்பு உங்களுக்கல்ல. உங்களுக்கு விளம்பரம் தர நினைக்காதவர்களுக்கு தானென்று நம்புகிறேன்.
தங்கள் இணையத்தளத்தில் என்னுடைய வலைப்பூவை கூட அறிமுகப்படுத்திய தங்களது பெருந்தன்மைக்கு நன்றி.
குறிப்பு : உங்கள் குட்டிக்கதைகளை தவறாமல் வாசிக்கிறேன். அதே பாணியில்
ஜட்டிக்கதைகள் எழுதலாமா என்று யோசிக்கிறேன்.
அன்புடன்
லக்கிலுக்
http://madippakkam.blogspot.com