| திரு. சாரு அவர்களுக்கு , வணக்கம்
நீங்கள் தரமான பாலியல் கதைகளை விரும்பி படிப்பவர் என்பதை தங்களின் கட்டுரைகளை படித்ததன் மூலம் தெரிந்துகொண்டேன் ஆகையால் நான் எழுதிய ஒரு பாலியல் கதை ஒன்றினை உங்களுக்கு அனுப்பியுள்ளேன். உங்கள் மதிப்பு மிக்க நேரத்தில் சிறிது ஒதுக்கி இந்த கதையை படிக்குமாறு பணிவுடன் வேண்டி கேட்டுக்கொள்கிறேன். முடிந்தால் தங்களின் இணையதளத்தில் இந்த கதையை பிரசுரிக்குமாறும் அன்புடன் வேண்டுகிறேன். கதை கீழே
மூடு சரியா வேல செய்யல
கிராமத்து மனிதர்களிடம் நகைச்சுவைக்கு என்றுமே பஞ்சம் இருக்காது அதுவும் பாலியல் சார்ந்த பேச்சுக்கள் என்றால் அவர்களிடம் என்றுமே ஒரு துள்ளலான நடையில் மிகுந்த உற்சாகத்துடன் பேச ஆரம்பிப்பார்கள். இந்த பேச்சுக்களில் என்றும் வக்கிர எண்ணங்களோ ஆபாசமான வார்த்தைகளோ; இருப்பதில்லை.
நாங்கள் முன்பு கிராமத்தில் வசித்து வந்த சமயம் எனது அப்பா தேங்காய் வியாபாரம் செய்து வந்தார். மரம் குத்தகைக்கு பேசி ஆட்களை வைத்து தேங்காய்களை வெட்டி கிடங்கிற்கு அனுப்புவார். வேலை நேரங்களில் வேலை ஆட்களுடன் நகைச்சுவையாக ஏதாவது பேசிக்கொண்டே இருப்பார். ஏன் அப்படி என்று கேட்டால் நகைச்சுவைனாலேயே ஒரு மனிதனை நாம் மிகவும் கிட்ட நெருங்க முடியும். வேலை செய்யும் அலுப்பும் தெரியாது என்பார்.
அப்படி ஒரு முறை காய் வெட்டிக்கொண்டிருந்த பொழுது தேங்காய்களை வெட்டாள் ராஜேந்திரன் கரும்பங்காட்டுக்குள் விழுமாறு போட்டுக்கொண்டிருந்தார். எனது அப்பாவும் கரும்பங்காட்டுக்குள் காய்களை போடாதே எடுப்பது சிரமம் என்றார். ஆனால் மீண்டும் வெட்டாள் கரும்பங்க்காட்டுக்குள்லேயே காய்களை போட்டுக்கொண்டிருந்தார்.
மீண்டும் அப்பா கேட்டார் ' ஏன் சொல்ல சொல்ல கேட்காமலே மீண்டும் மீண்டும் காய்களை கரும்பங்காட்டுக்குள் போடுகிறாய் ?' என்று.
வெட்டாள் ராஜேந்திரன் சொன்னான் ' மூடு சரியா வேல செய்ய மாடேங்குது அண்ணா ' என்று .
அப்பாவிற்கு சிரிப்பு தாங்க முடியவில்லை. வெட்டாளுக்கும் எனக்கும் ஒன்றும் புரியவில்லை ஏன் ? இப்படி சிரிக்கிறார் என்று. ஏன் சிர்க்கிறீர்கள் ? என்று கேட்டேன்.
அப்பா சொன்னார் ' மூடு சரியா வேல செய்யல என்கிறான் மூடு எப்படி வேல செய்யும் ? கிடா தானே வேலை செய்யும் ' என்று. இதைக்கேட்ட நானும் வெட்டாளும் விழுந்து விழுந்து சிரித்தோம்.
குறிப்பு : மூடு என்பது தமிழில் பெண் ஆடு என்று பொருள் . கிடா என்றால் ஆண் ஆடு என்று பொருள். இங்கு வெட்டாள் சொன்ன மூடு என்பது ஆங்கில வார்த்தையான mood என்பதாகும். |