கடிதம்

 

 

அன்புள்ள சாரு ,

வாசகர் சந்திப்பைப் பற்றிய தங்களின் அறிவிப்பைப் படித்தேன்.

அடுத்த மாதம் இரண்டாம் தேதி Bangalore வரும் போது தங்களைச் சந்திக்க ஆவலாய் உள்ளேன்.

உங்கள் எழுத்தின் தீவிர வாசகன் நான். தங்களின் ராஸ லீலா நாவலை ஒரே நாளில் 7 மணி நேரத்தில் ஒரு போத்தல் ஒயின் துணையோடு வாசித்தேன். ஒயின் கொடுக்கும் போதையை விட தங்கள் எழுத்து தரும் போதை அலாதியானது.ஒவ்வொரு முறை படிக்கும் போதும் ஒவ்வொரு புதிய அர்த்தத்தைத் தருவதாக இருக்கிறது உங்கள் எழுத்து.   எனக்குத் தெரிந்தவர்களுக்கும் உங்கள் இணைய தளத்தை அறிமுகப் படுத்திக் கொண்டிருக்கிறேன்.

தங்களை சந்திப்பதை பெரும் பாக்கியமாக கருதுகிறேன். அதற்கான தங்களின் அனுமதி கிடைக்கும் என நம்புகிறேன். charruonline.com இணைய தளத்தின் 2 வது லட்சம் வாசகன் நான் என்பதில் பேரு மகிழ்ச்சி. ( Attached the screen shot for the same) :-)


Note : Please pardon me if i write anything wrong in Tamil as i am very poor in Tamil writings.

Regards,
Darvin,
Bangalore.