கடிதம்

 

 

அன்புள்ள சாரு ,

வாசகர் சந்திப்பைப் பற்றிய அறிவிப்பைப் படித்தேன்.  

என்னது , 2nd ஆகஸ்டிலா சந்திப்பு ?  அவ்வாறெனில் , மூன்று லட்சம் ஹிட்ஸிற்கான சந்திப்பென்று மாற்றுங்கள் :)

அடுத்த மாதம் இரண்டாம் தேதி பங்களூர் வர இயலுமா எனத் தெரியவில்லை.   வராவிட்டாலும் அங்கு நடந்து கொண்டிருக்கும் கொண்டாட்டங்களைப் பற்றியே நினைத்துக் கொண்டிருப்பேன்.

நீங்கள் வா மு கோமு (இவர் ராஜமைந்தன் என்ற பெயரில் நடு கல் பத்திரிகையில் எழுதிய ' ஹாஃப் பியருக்கு வந்த மப்பு ' கவிதை ஒரு counter poetry க்கான நல்ல உதாரணம்) மற்றும் அதிகம் அறியப்படாத எழுத்தாளர்களைப் பற்றி எழுதுவது பிடித்திருக்கிறது.   நேர்ப் பழக்கமோ அல்லது வேறு விதமான தொடர்புகளோ அற்ற ஒரு எழுத்தாளனின் எழுத்தை உங்கள் அளவிற்குப் பாராட்ட தற்சமயம் யாருமில்லை :(

--
அன்புடன் ,
ஜ்யோவ்ராம் சுந்தர்