| அன்பு சாரு!
உங்களது 37 வது குட்டிக்கதையை படித்துவிட்டு மெய்மறந்து நிற்கிறேன். இப்படியெல்லாம் கூட எழுத முடியுமா என்ற சந்தேகத்தில் என்னை நானே கிள்ளி பார்த்துக் கொள்கிறேன். அதுவும் பெருமாளின் ' செக்ஸ் ' ஆசையை அந்த பெண் நிராகரித்ததையும் வெளிப்படையாக எழுதியிருப்பது சூப்பர் :-)
சரஸ்வதி சபதத்தில் சிவாஜி நாக்கில் சரஸ்வதி ஏதோ எழுதியது போல உங்கள் நாக்கிலும் ஏதாவது தெய்வம் வந்து எழுதிவிட்டு சென்றிருக்கிறதோ என்னவோ ?
குட்டிக்கதைகளில் விறுவிறுப்பு கூடிக்கொண்டே போகிறது. ஒரு சின்ன விண்ணப்பம் , குட்டிகதையை ரொம்ப குட்டியாக எழுதாமல் இந்த கதை அளவுக்காவது பெருசாக எழுதுமாறு கேட்டுக் கொள்கிறேன். ரொம்ப குட்டியாக படித்தால் பொசுக்கென்று இருக்கிறது. :-)
அன்புடன்
கிருஷ்ணா |