சாரு அவர்களுக்கு,
முதல் வணக்கம். பெங்களூரில் தனியார் நிறுவனமொன்றில் பணியாற்றி வருகிறேன். தங்களின் பெங்களூர் வருகை மற்றும் வாசகர் சந்திப்பு பற்றி அறிந்தேன். கலந்து கொள்ள முயலுவோம் என்று எண்ணினேன். அதற்குச் சில முன்னேற்பாடுகள் செய்வதென்றும் முடிவு செய்தேன். உங்களின் ராஸ லீலாவைப் படித்துவிட வேண்டும் என்பது அதில் பிரதானமானது. ஆனால் கடந்த ஒரு மாத காலமாக சில பல செளகரியங்களுக்காக என் குடும்ப ஊர்தியை இவ்வூரில் வைத்துப் புழங்கியதன் காரணமாக காசு கரைந்து ராஸ லீலாவை வாங்க முடியாமலே போய்விட்டது.
இந்த மாதம் சம்பளம் வந்து வாங்கிவிடலாம். ஆனால் உங்களைச் சந்திக்கும் முன்னர் படிக்க முடியுமா என்பது சந்தேகமே. ஆக உங்களின் புத்தகங்களைப் பெரிதும் படித்ததில்லை. சாரு நிவேதிதா என்ற எழுத்தாளர் பற்றி முன்னமே அறிந்திருந்தேன். ஆனால் நண்பன் ஒருவன் தங்களின் The Mummy Returns கட்டுரையைப் பகிர்ந்துகொண்ட போது அக்கட்டுரையின் எழுத்தாளுமையோ , எளிமையோ ஏதோ ஒன்று என்னை வசீகரித்தது. I would not be definitely lying when I say I gave a damn for the content of that particular post.
பின்னர் தங்களின் இணைய தளம் பற்றிய அறிமுகம் கிடைத்த கடந்த ஆறு மாதங்களாகத்தான் உங்களின் பதிவேற்றங்களை ஆர்வத்துடன் தொடர்ந்து படித்து வருகிறேன். அதன் அடிப்படையில் சாரு நிவேதிதாவின் உலகினைப் பற்றி ஓரளவு யூகிக்க முடிந்தது. ஆக நான் உங்களை சந்திப்பதாயின் என்னுடைய இந்த யூகங்களே அதற்கு ஆதாரமாய் அமையும். இது போதுமா, சாரு என்ற Monster ஐ (இந்த ஆங்கில வார்த்தை நல்லர்த்த அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது) நெருங்குவதற்கு ?
முடிவெடுக்க இயலவில்லை. அடுத்து வந்ததோ அதை விட கொடுமையான செய்தி. சந்திப்பு Hotel Royal Orchids இல் நடைபெறும் என்பது. சற்று மேல்தரமான இடம் அது என்று தெரியும். எனினும் நண்பர்களிடம் விசாரித்த வகையில் சுமார் ஓராண்டுக்கு முன்னர் அங்கே புஃபேயின் விலை ரூ. 500 ( வரிகள் தனி ) என்றறிந்தேன். அவ்வளவு விலை கொடுத்து நான் சாப்பிடுவதென்பது இது வரை வேறு யாரேனும் ஒருவரது செலவிலேயே நடந்துள்ளது. அடிக்கடி விருந்து என்று அழைத்துச் செல்வார்கள்.
சில விஷயங்கள் விலையற்றவைதான். சந்தேகம் இல்லை. இருந்தாலும் அங்கு வந்து ஒன்றும் சாப்பிடாமல் இருப்பது நன்றாக இருக்காது. ஆக கூட்டிக் கழித்துப் பார்த்தால் இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை சென்னை வரும் நான், ஒரு நாள் வெள்ளென எழுந்து நாகேஸ்வரராவ் பூங்காவில் சந்திப்பது உசிதமானது என்று முடிவெடுத்து அமைதியானேன். முடிந்தால் ராயர் கஃபேவுக்கு வழியும் கேட்டுக் கொள்கிறேன். நீங்களும் வந்தால் சந்தோஷம்.
மற்றும் வேறு தொழில் , பணம் சம்பாதிப்பது குறித்த வாசகரின் கேள்விக்கு தங்களின் பதிலில் வழக்கம் போல் உண்மை விளம்பியுள்ளீர்கள். எழுத்தை , எழுதுவதை ஒரு தொழிலாக , தவமாக கண்டிப்பாக ஒருவன் கொள்ளலாம். ஆனால் எழுத்துக்களை வாசிப்பதை ஒருவன் தொழிலாக கொள்ள இயலாது. அந்த வகையில் பல விஷயங்களை அறுத்தெறிந்து தனித்திருக்க அதிக சுதந்திரமுண்டு உங்களுக்கு. எந்த உண்மையான கலைஞனுக்கும் அப்படியே.
ஆனால் வாசகனோ எந்த நிலையிலும் சாதாரண மனிதர்களை போலவும் யோசிக்கத் தவறுவதில்லை. அப்படியில்லாமல் அவன் மாறுபட்ட சிந்தனை உள்ளவனாயின் ஆங்கோர் அந்நியன் ஆகி ஒரு எழுத்தாளனாகவோ என்னவாகவோ உருவாகி விடுகிறான். ஆனால் பெரும்பாலானோர் அப்படி ஆவதில்லை .
எல்லா வேலைகளையும் மயிரே போச்சு என்று ஒதுக்கிவிட்டு முழுமூச்சாக ஒரு மணி நேரம் உட்கார்ந்து எழுதியிருக்கக்கூடிய வேலை இது. ஆனால் அலுவல்களைப் புறக்கணிப்பதை , தொழில் சார்ந்த வகையில் சில சாதனை எல்லைகளைத் தொட முற்பட்டிருக்கும் எனது எளிய மனித இயல்புகள் அனுமதிக்க மறுக்கின்றன. கையில் காசு இருந்திருந்தாலாவது அனுப்பி இருக்கலாம். அதற்கும் வழி இல்லை.
I used to be an avid reader of various blogs. But off late I have restricted myself to quality websites like yours. For I find it a grave waste of time hogging around blogs. In such ways I follow only a few useful websites and blogs. And your website is one I mostly look up for being connected with my mother tongue. I am suddenly shifting to write in English as I did not want to give you the pain of translating my letter in case you decide to put it up. But however typing in tami l is taking too much time with the tool I have. However I will definitely type the last and the gist line of this mail in tamizh. Well back to my Blog readings. I have it as a policy as not to read blogs during office hours as it intensely affects work. However there are exceptions to that rule. Three websites to be precise. And yours for one is sure. One other site exempted is Baradwajrangan's review on movies. Though he review mostly Hindi movies which I don't mostly see, but still this man's passion for writing and cinema is just fabulous. And you should definitely read one of his latest entries http://www.desipundit.com/baradwajrangan/2008/07/26/between-reviews-a-bloody-good-show/ which is all about subramaniyapuram which you too had mentioned as a classic in one of your posts.
ஆக என்னுடைய தற்போதைய சூழ்நிலையில் தங்களுடைய எழுத்துக்களை என்னுடைய கடையாய தேவையாக்கிக் கொள்வதில் சிரமம் ஏதுமிருக்காது. அத்தகு நிலைபாட்டில் உள்ள ஒருவனைச் சந்திப்பதில் தாங்கள் அர்த்தம் காண முடிகிறதா ?
பி.கு:
1) தமிழில் எழுதியதில் பிழை இருந்தால் பொறுத்தருளவும்.
2) Baradwajrangan ஐ முன்னமே தெரியுமா ? ( சினிமா விமர்சனத்துக்கான சென்ற ஆண்டு தேசிய விருது பெற்றவர்).
3) இதை எழுதி முடிக்கும் நேரத்தில் நண்பனிடமிருந்து தகவல் வெள்ளி இரவு காட்சி குசேலன் படத்திற்கான டிக்கட் கிடைத்துவிட்டது. விலை ரூ. 350. ஆ …. அதற்கு முன்னமே சம்பளம் வந்து விடும்.
அன்புடன்
நரேன்.
பெங்களூர்.
* * * * *
(அது சரி நரேன், உங்களுடைய தமிழ் ஏன் இவ்வளவு கடினமாக இருக்கிறது?இப்படியெல்லாம் உங்களுடைய தோழிகளிடம் பேசினால் ஓடி விடுவார்களே? – சாரு).
* * * * *