கடிதம்

 

என்னை சாரு என்றே அழைக்கலாம் கென் , என்பதில் ஆரம்பித்து வாசிப்பவனுக்குத்தான் சிற்றிதழ்களோ, இலக்கிய நிகழ்வுகளோ தெரிந்திருக்க வேண்டியதில்லை.

எழுத ஆரம்பிக்கிறவன் ஒவ்வொருவனும் கொஞ்சமேனும் வாசிக்க வேண்டும் ஒரு அயல் நாட்டு மொழி கற்கவோ, ஒரு இசைக்கருவி கற்கவோ எவ்வளவு தூரம் உழைப்பும், நேரமும் செலவிட வேண்டியிருக்கிறது, வலைப்பூக்கள் எழுதவும், விமர்சன பார்வையில் எழுதவும் வாசிக்காமல் இருக்க கூடாது, குறைந்த பட்சம் கணையாழியின் கடைசிப்பக்கங்களையாவது வாசித்திட வேண்டும் என்பது வரையிலும், தங்களைப்பற்றி நான் கட்டமைத்திருந்த சாரு உடைந்து போய்க்கொண்டிருந்தார்.. ,

ஆதவனின் காகித மலர்கள், வாமு. கோமு வின் சிறுகதைகள், மனோஜ் சிறுகதைகள், ஷோபா சக்தியின் சிறுகதைகள், பாரீஸ் வாழ்க்கை, வாசிப்பு, உழைப்பு என எல்லா வார்த்தைகளுமே புதிதாய் எழுத ஆரம்பித்திருக்கிற என் போன்றவர்களுக்கு; மிக உபயோகமானது

கிளம்புகையில் குடும்ப அரசியல், காதல்; பற்றிய கேள்விகளில் என்னைக் கேட்டீர்கள்

DO YOU PHYSICALLY ENGAGED WITH ANY ONE KEN ??

இந்த recognition- க்கு முன் வரை நான் உங்களை நேரிலோ, மின் மடலிலோ தொடர்பு கொண்டதில்லை என்பது நிறைய பேருக்கு தெரிந்திருக்காது.

இனி இன்னமும் ஒழுங்காக வாசிக்கவும், எழுதுவும் முயற்சிக்கிறேன். நன்றி சாரு ..,

--
- கென் -


www.thiruvilaiyattam.com