திருத்தம்

 

வணக்கம் சார்!

தங்களின் தசாவதாரம் விமர்சனம் வாசித்தேன். பின்னி பெடலெடுத்திருக்கிறீர்கள்... :-)

///தீவிரவாதிகளைத் தேடுகிறோம் என்ற பின்னணியில் கலீஃபுல்லா குடும்பமும் , இன்னும் அந்த ஊரிலுள்ள அத்தனை முஸ்லீம் குடும்பங்களும் விசாரணைக்காக ஆட்டு மந்தைகளைப் போல் போலீஸ் ஸ்டேஷனில் அடைக்கப் படுகிறார்கள். அப்போதுதான் சுனாமி வந்து ஊரிலுள்ள பலரும் சாக நேர்கிறது. அப்போது போலீஸ் ஸ்டேஷனில் இருக்கும் கலீஃபுல்லாவின் வாப்பா "நல்ல காலம் , நாம் போலீஸ் ஸ்டேஷனில் இருந்ததால் சுனாமியிலிருந்து தப்பினோம்" என்று கூறுகிறார். இந்த வசனத்தில் அடங்கியிருக்கும் அரசியல் என்ன என்பதை கமல் இப்போது தசாவதாரம் பற்றிக் கொடுத்துக் கொண்டிருக்கும் நூற்றுக் கணக்கான தொலைக்காட்சிப் பேட்டி ஒன்றிலாவது விளக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். //

இந்த பகுதியில் மட்டும் ஒரு திருத்தம். கலிஃபுல்லா கானின் குடும்பமும், அந்த ஊரில் இருக்கும் அத்தனை இஸ்லாமியர்களும் மசூதி ஒன்றில் அடைத்து வைக்கப்பட்டு காவல்துறையினரால் விசாரிக்கப்படுகிறார்கள், காவல் நிலையத்தில் அல்ல. இதை மட்டும் இணையத்தில் இடம்பெற்ற கட்டுரையில் திருத்தி விடுங்கள். எப்படியும் இதை உயிர்மையில் திருத்தமுடியாது :-(

அன்புடன்
கிருஷ்ணா

* * *