நன்றி

 

மிகவும் நெகிழ்ந்து போனேன். எழுத்தின் பயனை அடைந்து விட்டேன். என் எழுத்தை டைப் செய்து கொடுக்க சுமார் ஐம்பது பேர் முன் வந்தார்கள். ஜெயந்தி என்ற வாசகி அமெரிக்காவிலிருந்து எழுதினார் , நீங்கள் அந்தப் பக்கங்களை ஸ்கேன் செய்து அனுப்பி வைத்தால் போதும் நான் டைப் செய்து மின்னஞ்சல் செய்கிறேன் என்று. எல்லோரையும் விட ஆச்சரியப் படுத்தினார் என் நண்பர் செந்தில். அந்த வேண்டுகோள் பதிவேற்றம் செய்யப் பட்ட இரண்டாவது நிமிடத்தில் அவரிடமிருந்து போன் , நான் டைப் செய்து தருகிறேன் என்று. இதற்கிடையில் அவர் ஒரு மென்பொருள் நிறுவனத்தின் பெரும் பொறுப்பில் இருப்பவர். இன்னொரு ஆச்சரியம் நேரிலேயே கிடைத்தது. கர்னாடக சங்கீதத்தில் விற்பன்னரான சோமன் என் வீட்டுக்கே வந்து விட்டார். "உங்களுக்கு எழுத்து எப்படியோ அப்படித்தான் சங்கீதம் எனக்கு ; உங்கள் எழுத்துக்களை நான் அடித்துத் தருகிறேன்" என்றார்.

நன்றி நண்பர்களே...உங்கள் அனைவருக்கும் என் அன்பான நன்றி. பிரச்சினை தீர்ந்தது.

***

9.7.2008.

7.30 p.m.