|
எனக்கு சில உதவிகள் தேவைப் படுகின்றன. அன்பர்கள் கவனிக்கவும்.
1. பழைய தமிழ் சினிமாப் பாடல்கள் பற்றிய கட்டுரையை விரிவு படுத்திக் கொண்டிருக்கிறேன். உங்களில் யாரிடமாவது பழைய பாடல்களின் தொகுப்பு இருக்கக் கூடும். இருந்தால் எனக்குக் குறுந்தகடாகக் கொடுக்க முடியுமா ? எம்.கே.டி.யிலிருந்து தொடங்கி விஸ்வநாதன் ராமமூர்த்தி வரை போதும். இளைய ராஜா வேண்டாம்.
2. Manuel Puig -இன் Betrayed by Rita Heyworth மற்றும் Walter Abish -இன் Alphabetical Africa இரண்டு புத்தகங்களும் தேவை. யாரேனும் வாங்கி அனுப்ப முடியுமா ?
3. என்னுடைய சில கட்டுரைகள் , பேட்டிகள் டைப் செய்யப் பட்ட நிலையில் உள்ளன. அவற்றை நமது இணைய தளத்தில் பதிவேற்றம் செய்ய மீண்டும் டைப் செய்ய வேண்டும். அந்த வேலையை நான் செய்து கொண்டிருந்தால் புதிதாக எழுத வேண்டியவை நின்று போகும். எனவே அவற்றை டைப் செய்யும் பொறுப்பை யாரேனும் ஏற்றுக் கொள்ள முடியுமா?
***
7.7.2008.
9.35 a.m. |