|

” பெருமாளும் அவனுடைய கூட்டாளிகளையும் போல் நாமும் வனப்பகுதிக்குச் செல்லலாமா கண்ணே? ” என்று தன்னுடைய காதலி தாரிணியிடம் கேட்டான் விஷால்.
” செல்லலாம்; ஆனால் எனக்கு மிருகம் என்றால் பிடிக்காதே? ” என்றாள் அவள்.
” ஓ...உண்மைதான். ஒரு மிருகத்துக்கு இன்னொரு மிருகம் பிடிக்காதுதான். ”
“யெஸ்...நான் ஒரு மிருக தேவதை. என்னிடம் தேவதையும் உண்டு; மிருகமும் உண்டு. ”
“தேவதைகள் எனக்கு அலுத்து விட்டது கண்ணே; உன் மிருகத்தை என்னிடம் காண்பி... ”
“நிச்சயமாக... என் மிருகம் உனக்குப் பிடிக்கும்...என் மிருகத்தை நீ கொண்டாடுவாய். அந்த நாள் சீக்கிரம் வரும். காத்திரு … விஷால் மை லவ் … சொல்வதற்கே எவ்வளவு இனிமையாக இருக்கிறது...ஆனால் சரீர இன்பத்திற்காக மட்டும் என்னிடம் பழகாதே விஷால்...என்றுமே நான் உன்னுடையவள்தான்...என்னிடம் பேசிக் கொண்டே இரு...எதை வேண்டுமானாலும் பேசு...செக்ஸ்...வன்முறை...கோபம்...வெறி...ரத்தம்... ரொமான்ஸ்...அன்பு..எது பற்றி வேண்டுமானாலும் பேசு விஷால்... தடங்கலோ தடைகளோ கட்டுப்பாடுகளோ இல்லாமல் பேசு... ”
***
10.7.2008.
11.10 p.m. |