குட்டிக்கதைகள் நூற்றியெட்டு (41)

 

 

(இந்த நிலையிலேயேதான் ஏழு வயது வரை என்னிடம் வளர்ந்தாள் ரேஷ்மா. பார்ப்பவர்கள் ' தரையில் நடக்க மாட்டாளா ?' என்று கிண்டல் செய்வதுண்டு )

முந்தின தினம் இரவு பூராவும் படித்து விட்டு மறுநாள் சற்று தாமதமாகச் சென்றதால் நாகேஸ்வர ராவ் பூங்காவில் நீண்ட நாட்களுக்குப் பிறகு ஸ்ரீவில்லிப்புத்தூர் ராகவனைச் சந்தித்தான் பெருமாள். எப்போதும் கை நிறைய கதைகளோடு இருக்கும் ராகவன் , அன்றைய தினம் Stockholm syndrome பற்றிய கதையோடு வந்திருந்தார்.

தமிழர்களைப் பீடித்திருக்கும் முக்கிய நோய்களில் ஒன்று Stockholm syndrome.

எப்படி ?

உங்களை யாராவது பிணைக் கைதியாகக் கடத்திக் கொண்டு போய் வைத்திருக்கும் போது உங்களுக்கு அந்தக் கடத்தல்காரனின் மீது ஒருவித பற்றும் பாசமும் ஏற்பட்டு விடும். இதை , கடத்தலுக்கு ஆளாகிப் பின்னர் விடுதலை செய்யப் பட்டவர்கள் தரும் பேட்டிகளிலிருந்து நீங்கள் கண்டு கொள்ளலாம். தங்களைக் கடத்தி வைத்திருந்தவர்களை ஆஹா ஓஹோ என்று புகழ்ந்து தள்ளுவார்கள். கடத்தல்காரனின் நிபந்தனைகள் ஏற்றுக் கொள்ளப் பட்டிருக்காவிட்டால் இந்த மக்குகளின் தலை அதுகளின் உடலிலிருந்தே துண்டாடப் பட்டிருக்கும் என்பதெல்லாம் அப்போது அதுகளுக்கு மறந்து போயிருக்கும்.

சரி , அதற்கும் தமிழர்களுக்கும் என்ன சம்பந்தம் ?

பன்னெடுங் காலமாக தமிழர்களை assf...k பண்ணிக் கொண்டிருப்பது அரசியல்வாதிகள்தானே ? அந்தக் கால அரசர்களையும் இந்த லிஸ்டிலேயே சேர்த்துக் கொள்ளலாம் ; என்னைப் பொறுத்தவரை அந்த அரசப் பயல்கள்தான் இன்றைய அரசியல்வாதிகளின் முன்னோடி என்று சொல்லுவேன். சரி , இப்படிப் பட்டவன்களை நம்முடைய மக்கள் என்ன செய்கிறார்கள் ? பாராட்டிக் கொண்டாடுகிறார்கள்... இதை ஸ்டாக்ஹோம் ஸின்ட்ரம் என்றுதானே சொல்ல வேண்டும் ?

நிச்சயமாக ராகவன்.அப்படிப் பார்த்தால் நம்முடைய மனித இனத்துக்கே ஸ்டாக்ஹோம் ஸின்ட்ரம் இருக்கிறது என்று சொல்லலாம்.

எப்படி ?

இந்த உலகமும் , இந்த வாழ்க்கையும் வாழத் தகுதியானதாகவா இருக்கிறது ? இப்படி ஒரு மகா பயங்கரமான உலகத்தைப் படைத்து , இதில் இவ்வளவு பயங்கரமான மனிதர்களையும் படைத்து நம்மை assf...k பண்ணிக் கொண்டிருக்கும் கடவுளை நாம் என்ன பண்ணுகிறோம் ? வணங்கவும் தொழவும்தானே செய்கிறோம் ? இது ஸ்டாக்ஹோக் ஸின்ட்ரம் இல்லாமல் வேறு என்ன ?

***

9.7.2008.

8.45 p.m.