குட்டிக்கதைகள் நூற்றியெட்டு (40)

 

 

(தில்லியில் வசித்த போது எடுத்தது. இடமிருந்து இரண்டாவதாக இருப்பவர் யதார்த்தா பெண்ணேஸ்வரன். ஆண்டு 1985ஆக இருக்கலாம்)

டியர் பெருமாள்,

எப்படி இருக்கிறாய்? இன்றைய நாள் எப்படி இருந்தது? என்ன விசேஷம்?

குட்டிக் கதைகளைத் தொடர்ந்து படித்து வருகிறேன்.

இலக்கியம் பற்றி என்னிடம் பேசு.

சினிமா பற்றிப் பேசு.

பியானிஸ்ட் பற்றி.

பியானோ டீச்சர் பற்றி.

சினிமா பேரடைஸோ பற்றி.

ராஸ லீலா பற்றி.

ஸீரோ டிகிரி பற்றி.

எதைப் பற்றி வேண்டுமானாலும் இருக்கட்டும். உன்னுடைய வார்த்தைகள் என்னுள் இனம் காண முடியாத ஒரு ரசாயன மாற்றத்தை உண்டாக்குகின்றன. என்னை வசியம் செய்கின்றன. இரவு பகல் பாராமல் உன்னுடைய வார்த்தைகளைக் கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும் போல் இருக்கிறது. எந்தக் குறுக்கீடும் இல்லாமல் உன்னிடம் பேசிக் கொண்டே இருக்க வேண்டும் போல் இருக்கிறது. அந்த நிலவும் நட்சத்திரங்களும் தென்றலும் கடலும் நம்மைப் பார்த்துப் பொறாமை கொள்ள வேண்டும்...That will be hype to me...அந்த போதை எனக்கு வேண்டும் பெருமாள்.

I am an addict to your writings...
I am an addict to your words...
I am an addict to your personality...

luv
ஹரிணி
பயோ டெக்னாலஜி மையம்
XXX பல்கலைக் கழகம்
சென்னை.

***

9.7.2008.
6.35 p.m.