| சிங்கக் குட்டிகளா , இந்தக் குட்டிக் கதைகளில் வரும் கதாபாத்திரங்களை ‘ இது யார் , அது யார்' என்று அடையாளம் கண்டுபிடிக்கும் விளையாட்டைச் சற்று நிறுத்திக் கொள்கிறீர்களா? 37-ஆவது குட்டிக் கதையைப் படித்து விட்டு ஆளுக்கு ஆள் சில அப்பாவி இளம் நடிகர்களின் பெயரைப் போட்டுக் குழப்பிக் கொண்டு விட்டார்கள். அதை எழுதும் போது எனக்கு அந்த நடிகர்களைப் பற்றிய ஞாபகமே இல்லை. அதனால் அந்த இரண்டு சகோதரர்களையும் இரண்டு கிரிக்கெட் ஆட்டக்காரர்கள் என்று மாற்றி வாசித்துக் கொள்ளுங்கள். சரியா?
***
பெருமாள் தபால் இலாகாவில் ஸ்டெனோவாக வேலை செய்து கொண்டிருந்த போது அவனும் அவனுடைய ப்பீயெம்ஜீயும் காரில் சென்று கொண்டிருந்தனர். காரில் ஏறியதுமே தூங்க ஆரம்பித்து விடுவார் ப்பீயெம்ஜீ. அன்றும் அப்படித்தான் தூங்கிக் கொண்டிருந்தார். ரோட்டின் நடுவே திடீரென்று ஒரு ஆடு ஓட , சட்டென்று ப்ரேக்கை அழுத்தினார் ட்ரைவர். திடுக்கிட்டு எழுந்த ப்பீயெம்ஜி என்னப்பா விஷயம் என்று வினவ, ட்ரைவர் சொன்னார்.
“ மட்டன் க்ராஸிங் ரோடு சார் ; புட்டிங் ப்ரேக்கு சார். ”
அந்த ட்ரைவரைப் பற்றி எப்போது நினைத்தாலும் பெருமாளுக்கு அந்த உத்தமத் தமிழ் எழுத்தாளனே ஞாபகம் வருகிறான்.
***
7.7.2008.
8.45 a.m.
|