குட்டிக்கதைகள் நூற்றியெட்டு (37)

 

மைக்கேல் ஒரு சினிமா நடிகன். மைக்கேலின் தம்பி ஸ்டீஃபனும் ஒரு வளர்ந்து வரும் நடிகன். இரண்டு பேரும் பெருமாளின் நெருங்கிய சினேகிதர்கள். பெருமாளுக்கு ஸ்வப்னா என்று ஒரு தோழி. திருமணமானவள். பெருமாளும் ஸ்வப்னாவும் இலக்கியம் தவிர வேறு எதுவும் பேசியது இல்லை. நேரிலும் சந்தித்து இருக்கின்றனர். அந்தக் காலத்து வைஜயந்தி மாலாவைப் போல் இருப்பாள். நேர் சந்திப்பிலும் இலக்கியம் தவிர வேறில்லை. ஆனால் குறுஞ்செய்தியாக தினந்தோறும் செக்ஸ் ஜோக்குகளை அனுப்பிக் கொண்டிருப்பாள். இதனால் மனம் பிசகிப் போன பெருமாள் ஒருநாள் தான் அவளிடம் செக்ஸ் உறவு கொள்ள விரும்புவதாகக் கூறினான். இதைக் கேட்டு மிகவும் அதிர்ந்து போனாள் ஸ்வப்னா.

" நீ கூடவா பெருமாள் ? நான் உன்னை எவ்வளவு பெரிய உயரத்தில் வைத்திருக்கிறேன் ?" எட்ஸெட்ரா எட்ஸெட்ரா டயலாகை எல்லாம் சொல்லி விட்டு "நான் எப்படி என்

கணவருக்குத் துரோகம் செய்ய முடியும் , சொல் ? மேலும் , ஒரு ஆணும் பெண்ணும் செக்ஸ் இல்லாமல் பழகவே முடியாதா என்ன ? எவ்வளவோ பெண் விடுதலை பேசுகிற நீ கூடவா மற்றவர்களைப் போல் பேசுவது ?" என்றெல்லாம் தொடர்ந்து நீண்டதொரு லெக்சரை அடித்தாள்.

அதன் பிறகு பெருமாள் அந்தச் சனியன் பிடித்த சப்ஜெக்டை அவளிடம் எடுப்பதில்லை. இரண்டு பேருமே ஏதோ திரேதா யுகத்து மனிதர்களைப் போல் பழகி வரலாயினர். அதையும் மீறி இரண்டொரு முறை அவன் அந்தப் பேச்சை எடுத்த போதும் , தேய்ந்து போன இசைத்தட்டைப் போல் அந்த லெக்சரையே திரும்ப அடித்தாள் ஸ்வப்னா. பதிலுக்கு பெருமாளின் சோகக்கதையான "ஐந்து வருடங்களாக செக்ஸ் இல்லாமல் செத்துக் கொண்டிருக்கும் உன்னுடைய அருமை நண்பனுக்கு நீ சொல்லும் பதில் இதுதானா ஸ்வப்னா ?" என்று கேட்பான். அதற்கும் அந்தத் தேய்ந்த இசைத்தட்டிலிருந்து அந்தத் தேய்ந்து போன பதிலே வரும்.

சமயங்களில் "நானும் உன்னைப் போல்தான் பெருமாள்" என்பாள்.

" அப்படியா , ஏன் ?"

" கணவருக்கு ஆயிரத்தெட்டு வேலை , கவலை...எனக்கோ ஆம்பத்திலிருந்தே செக்ஸில் ஈடுபாடு இல்லை."

இதற்கிடையில் பெருமாளிடமிருந்து ஸ்டீஃபனின் தொலைபேசி எண்ணைக் கேட்டு வாங்கியிருந்தாள் ஸ்வப்னா. அவளைப் பற்றித் தெரியும் என்பதால் பெருமாளும் எந்த விகல்பமும் இல்லாமல் தொலைபேசி எண்ணைக் கொடுத்தான். இதற்குச் சில மாதங்களுக்குப் பிறகு ஒருநாள் அவள் மைக்கேலின் எண்ணையும் கேட்டாள். அப்போது மட்டும் சற்றுத் தயங்கிய பெருமாள் மைக்கேலிடம் அனுமதி கேட்டுக் கொண்டு எண்ணைக் கொடுத்தான்.

இதெல்லாம் முடிந்து இரண்டு வருடங்கள் இருக்கும். இப்போதெல்லாம் ஸ்வப்னாவிடமிருந்து பெருமாளுக்கு செக்ஸ் ஜோக்குகள் வருவதில்லை. பெருமாளுக்கும் இந்த மாதிரி கண்ணகி வாரிசுகளிடமிருந்து செக்ஸ் ஜோக்குகளை குறுஞ்செய்தியாகப் பெற்றுப் படிப்பது பிடிக்காதாகையால் அவனும் அப்படியே அவளை மறந்து விட்டான். மூன்று மாதத்திற்கு ஒரு முறை பேசுவாள். அவளும் பெருமாளைப் போல் பாபா பக்தையாகி விட்டதால் பாபா பற்றிப் பேசுவாள். பெருமாளுக்கு இந்த மாதிரி கண்ணகி வாரிசுகளிடமிருந்து செக்ஸ் ஜோக்குகளை குறுஞ்செய்தியாகப் பெற்றுப் படிப்பது எவ்வளவு பிடிக்காதோ அதைப் போலவே பாபா பற்றிப் பேசுவதும் பிடிக்காது என்பதால் அவன் அவளுடைய பேச்சுக்களில் அசுவாரசியம் காட்ட ஆரம்பித்தான். பிறகு அடிக்கடி பாபா பற்றிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் குறித்து அவற்றைப் பார்க்கச் சொல்லி குறுஞ்செய்தி அனுப்ப ஆரம்பித்தாள்.

" இதோ பார் , இன்றைய தினம் நிஜக் கடவுளே தொலைக்காட்சியில் தோன்றப் போகிறார் என்றால் கூட என்னால் அதைப் பார்க்க முடியாது" என்று ஒரு குறுஞ்செய்தி அனுப்பினான் பெருமாள். அதோடு அந்தத் தொடர்பும் நின்று போனது.

கதை இனிதான் ஆரம்பம்.

இரண்டு தினங்களுக்கு முன்பு ஒருநாள் ஸ்டீஃபனின் தொலைபேசி எண்ணைக் கேட்டு குறுஞ்செய்தி அனுப்பியிருந்தாள் ஸ்வப்னா. உடனே ' என்ன விஷயம் ?' என்று தோண்ட ஆரம்பித்தான் பெருமாள். பூதம் கிளம்பியது. அதாவது , ஸ்டீஃபனின் வழக்கம் என்னவென்றால் , நேரடி பிஸினஸ். ' நான் தயார் , நீ தயாரா ?' அதை விட்டு விட்டு மணிக்கணக்கில் மொக்கை போடுவது போன்ற வேலையெல்லாம் அவனிடம் கிடையாது. அதே போல் , வேலை முடிந்த பிறகும் இழுத்து வைத்துப் பிடித்துக் கொண்டிருக்க மாட்டான். உலகத்தில் இது ஒன்றுதானா ஜோலி ? சினிமாவில் அண்ணன் அடைந்த இடத்தை அவன் அடைய வேண்டாமா ?

ஸ்டீஃபனின் இந்த வழக்கப்படி ஸ்வப்னாவிடம் வேலை முடிந்த பிறகு தன்னுடைய அடுத்த வேலையில் கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டான். ஸ்வப்னாவிடமிருந்து போன் வந்தால் எடுப்பதேயில்லை. தொடர்ந்து வந்து கொண்டேயிருந்த போது ஒருநாள் "யார் சார் இது ?" என்று ஒரு குறுஞ்செய்தியைத் தட்டியிருக்கிறான். அப்போதுதான் ஸ்வப்னா பெருமாளுக்கு அந்தக் குறுஞ்செய்தியை அனுப்பினாள் , ' அந்த ஸ்டீஃபன் குரங்கு தொலைபேசி எண்ணை மாற்றி விட்டதா ?' என்று.

அடி வயிறு பற்றியெரிய மைக்கேலைப் பிடித்த பெருமாள் ஸ்வப்னா பற்றிக் கேட்டான். அதற்கு மைக்கேல் "அதை ஏன் கேட்கிறாய் , போ...தினம் தினம் போன் செய்து போன் செக்ஸ் செய்யச் சொல்கிறாள். ஷூட்டிங்கில் அத்தனை பேர் நின்று கொண்டிருக்கும் போது தனியாக வந்து அவள் உச்சக்கட்டத்தை அடையும் வரை அவளுக்காக போன் செக்ஸ் கொடுத்திருக்கிறேன். சமயத்தில் வெய்யிலில் நின்று கொண்டு அவளுக்காக போன் செக்ஸ் பேசுவேன். பெரிய டார்ச்சர்டா பெருமாள். இப்போது ' எத்தனை நாளைக்கு நீ இப்படி போனிலேயே செக்ஸ் பண்ணிக் கொண்டிருக்கப் போகிறாய் ? எப்போது நேரில் வருவாய் ?' என்று கேட்டு டார்ச்சர்..." என்று சிரித்துக் கொண்டே சொன்னான்.

இது எல்லாவற்றையும் விட முக்கியம் ஸ்டீஃபன் சொன்ன ஒரு விஷயம். ஸ்வப்னா ஸ்டீஃபனின் சாதனத்தைக் கையில் பிடித்து வைத்துக் கொண்டு "ஏன் என் கணவருக்கு இப்படியில்லாமல் தொங்கிக் கிடக்கிறது ?" என்பாளாம் அடிக்கடி. இந்தக் கேள்வியை அவள் அடிக்கடி கேட்பதைப் பார்த்த ஸ்டீஃபன் ஒரு முறை "ஐயோ அதை விட்டு விடடி...நீ பிடிக்கிற பிடியில் ரத்தக் கட்டு ஏற்பட்டு முதலுக்கே மோசம் ஆகி விடப் போகிறது..." என்று சொல்லியிருக்கிறான்.

கதையை கோபால கிருஷ்ணனிடம் சொல்லி முடித்த பெருமாள் "எப்படி இருக்கு ?" என்று கேட்ட போது , கோபால கிருஷ்ணன் அந்த கேம்ரி காரை முதுமலை காட்டின் கொண்டை ஊசி வளவுகளினூடே லாவகமாகச் செலுத்திக் கொண்டிருந்தான்.

" அடடா , ரொம்ப நல்ல பொண்ணு..."

இதுதான் கோபால கிருஷ்ணன் சொன்ன பதில். அப்படிச் சொன்ன போது ' ரொம்ப ' வில் இம்முக்கும் பாவுக்கும் இடையே ஒரு அரை நிமிட நேரம் இடைவெளி விட்டான் அவன்.

" ம்...நம்மள புரோக்கராவே ஆக்கிட்டாளுங்க..." என்று சொல்லிப் பெருமூச்சு விட்டான் பெருமாள்.

" ம்ஹூம்... நீ ஏன் இதை அப்படிப் பார்க்கிறாய்?ஃபுட் பால் ஆங்கிள்ளேர்ந்து பாரு..."

கோபால கிருஷ்ணன் ஒரு பிரபலமான கால் பந்தாட்டக்காரனாக இருந்தவன். இந்திய அணிக்காக உலகின் பெரும்பாலான நாடுகளில் விளையாடியவன் ; கோல் போட்டவன். எந்த விஷயத்தைச் சொன்னாலும் அதைக் கால்பந்தாட்டத்தோடு கொண்டு வந்து முடிச்சுப் போட்டு விடுவான்.

" இதோ பார் பெருமாள்... ஃபுட் பால்ல என்ன பண்றோம்...ஒருத்தன் பந்தை பாஸ் பண்ணி குடுக்குறான். அதை இன்னொருத்தன் கோல் அடிக்கிறான். அவ்ளோதானே ?"

***

4.7.2008.

6.00 p.m.