
அன்புள்ள சாரு,
நேற்று நீங்கள் அழைத்த வேளையில் மிகுந்த பதட்டத்தில் இருந்தேன். மருத்துவமனை பயங்கரங்களை சந்திப்பது எப்போதும் பழகிக் கொள்ள முடியாததாக இருக்கிறது.
எக்ஷிஸ்டென்ஷியலிசமும் ஃபேன்ஸி பனியனும் இன்னும் ஒரு வாரம் அல்லது பத்து நாளில் வந்து விடும். அட்டைபடம் வடிவமமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
ராஸலீலா புதிய பதிப்பு நேற்று மாலை கிடைத்தது. உயிர்மை.காம் மூலம் மூன்று ஆர்டர்கள் அதற்கு இதுவரை வந்திருந்தன. அவை நேற்றுமாலையே அனுப்பபபட்டு விட்டன. பொதுவாக புத்த்கங்கள் தொடர்பாக இணைய வாசகர்கள் காட்டும் பதட்டம் அதன் விற்பனையில் பிரதிபலிப்பதில்லை. புத்த்கங்கள் கிடைக்கவில்லை என்ற பேச்சுக்கு இனி இடமில்லை. இந்த மாதத்தில் ராஸலீலா 100 பிரதிகளாவது விற்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். காத்திருந்த எவ்வளவு வாசகர்கள் வருகிறார்கள் என்று பார்ப்போம்.
இன்று ஏதாவது ஒரு நேரத்தில் சந்திபோம்.
அன்புடன்
ஹமீது
--
uyirmmai
11/29subramaniyan street,abiramapuram
chennai-60018
phone:91-4424993448
mobile:9444366704
email:uyirmmai@gmail.com