கேள்வி: ஒலிம்பிக் 2008 ?

 

 

கேள்வி: ஒலிம்பிக் 2008?

( சூர்யா , மும்பை)

பதில்:   ஆபாசம் , அக்கிரமம் , அநியாயம்.   ஒலிம்பிக்கின் தொடக்க விழா அன்றும் இறுதி நாள் அன்றும் நடந்த வண்ண வான வேடிக்கைகள் பெரும்பாலும்   முன்கூட்டியே கணினியில் புரொக்ராம் செய்யப்பட்ட சர்க்கஸ் வேடிக்கைகள்.  

சீனா பெற்ற இத்தனை தங்கப் பதக்கங்களுக்கும் பின்னால் மிகப் பெரிய சோகக் கதை இருக்கிறது.   குழந்தைகளை ஐந்து வயதிலேயே குடும்பத்திலிருந்து பிரித்து அவர்களுக்கு விளையாட்டுப் பயிற்சி அளிக்கப் படுகிறது.   குழந்தைகள் அவர்களுடைய பெற்றோரைக் கூடப் பார்க்க முடியாத நிலை.   வீட்டுக்கும் போக முடியாது.   கிட்டத்தட்ட ரோபோக்கள் மாதிரிதான் அந்தக் குழந்தைகளின் நிலை.   அந்த ரோபோக்கள்தான் வளர்ந்து இன்று தங்கங்களைக் குவித்துக் கொண்டிருக்கின்றன.

இந்தியாவை எடுத்துக் கொண்டால் அது வேறு விதமான சோகக் கதை. குத்துச் சண்டையில் வெண்கலம் வென்ற விஜேந்தர் குமாருக்கு இந்தியக் குத்துச் சண்டைக் கழகம் என்ன மாதிரியான வசதிகளைச் செய்து கொடுத்தது தெரியுமா?

உள்நாட்டுப் போட்டிகளில் அவர் கலந்து கொண்ட போது தில்லியில் உள்ள குத்துச் சண்டைக் கழகக் கட்டிடத்திலேயே ஒரு அறைதான் அவருக்கு ஒதுக்கப் பட்டது. அந்த அறையிலேயே அவர் இன்னும் பத்து பேருடன் தங்கிக் கொள்ள வேண்டும். படுப்பதற்கு வெறும் பாய். கூடவே கரப்பான்பூச்சிகள், எலிகள்...இதுதான் இந்திய அரசு விளையாட்டு வீரர்களை நடத்தும் லட்சணம்.

பொதுவாக, இந்தியர்கள் ஒரு குழுவாக இணைந்து ஆடும் விளையாட்டுகளை விட தனித்தனியாக ஆடும் விளையாட்டுகளில் பதக்கம் வெல்லக் கூடியவர்கள் என்பதை அவதானிக்கிறேன். இந்தியர்களின் மனோபாவம் அப்படிப் பட்டது.

27.8.2008.

11.50 a.m.