
அன்புள்ள சாருவுக்கு,
பெங்களூர் வாசகர் சந்திப்பு பற்றிய கட்டுரையில் நான் உங்களை சந்தித்த குஷியில் குடித்துவிட்டு காணாமல் போனதாக எழுதியிருந்தீர்கள். குஷி என்ற வார்த்தையை " பரவசம்" என்று மாற்றியிருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும்.
உங்களுடன் கழித்த அந்த நாளை மறுபடி மறுபடி நினைத்து பரவசப்பட்டுகொண்டிருக்கிறேன். உணவு பழக்கங்கள் பற்றி ஒரு விரிவான
கட்டுரை உங்களிடம் கேட்டிருந்ததை நினைவு படுத்துகிறேன்.
என்னுடன் படத்திற்கு நீங்கள் வருவதாய் ஒப்புக்கொண்ட நேரம் ஒரு நல்ல படம் கூட வரவில்லை. "சத்யம்" படத்திற்கு மட்டும் உங்களை
கூட்டி சென்றிருந்தால் என்னை தியேட்டர் உள்ளேயே விரட்டி விரட்டி அடித்திருப்பீர்கள். நல்ல படத்திற்காக காத்திருக்கிறேன்.
அன்புடன்,
பாஸ்கர்
சென்னை.