" அவன் ஒரு குடிகாரன்டா , எங்கே என்ன குடிச்சேன்னு அதைத்தான் எழுதுவான்" இது தயா சாருவைப் பற்றி என்னிடம் சொன்னது. ( அதுசரி , சினிமா நடிகர்களை ஏன் மக்கள் அவன் , இவன் என்று ஒருமையில் பேசுகிறார்கள் ? இது ஒருமுறை சாரு கேட்ட கேள்வி. (சினிமா நடிகர்களை மட்டும் இல்லை மக்கள் பொதுவாக celebrities ஐ அவன் இவன் என்று தான் அழைக்கிறார்கள்.
இதுதான் நான் அறிந்த சாரு 2008. ஜனவரி வரை. சுஜாதா மறைவு அஞ்சலிக் கூட்டத்துக்கு. நான் செல்ல நினைத்த காரணம்
1. நான் சுஜாதாவின் எழுத்துக்கு ரசிகன்
2 ஜெயகாந்தன் (என்னதான் நான் கமல் அபிமானியாக இருந்தாலும்)
அன்று ஜேகேவுக்கு முன்பே சாரு பேச வந்தார் என்று ஞாபகம் எனக்குப் பின்னால் ஒரு மாமி "இவர் ஒரு controversial writer" என்றார் ( note: இவர்). சாரு பேசி முடித்த பின் இன்னும் கொஞ்சம் பேசி இருக்க மாட்டாரோ ? என்று தோன்றியது. இவர் வேற ஆள்டா என்றது மனம். அன்றைக்கு வீட்டுக்கு வந்து கூகிளிட்டுப் பார்த்ததில் புடிச்சேன் சாருஆன்லைன் .
இரவில் ஷிஃப்ட் முடிந்து வீட்டிற்கு வந்ததும் சாரு ஆன்லைன் படித்து விட்டுத்தான் மற்றது எல்லாம். போன மாதம் கென்யா போன போது கூட எனக்குத் துணை சாருஆன்லைன் தான். archives ஐ யும் படித்து விட்டேன். நிறைய கட்டுரைகளைத் திரும்ப திரும்ப படித்தேன். அவ்வா சிறுகதையை இதை எழுதுவதற்கு முன்பு கூட படித்தேன்.(எத்தனையாவது முறை ?). கடிதம் மற்றும் கேள்வி பதில் முதற்கொண்டு ஒன்றையும் விடுவதில்லை. (முகப்பில் கடிதம் கேள்வி பதில் என்பதற்குப் பதிலாக சாரு பாணியிலேயே அதற்குத் தலைப்பு கொடுத்தால் நன்றாக இருக்குமா ?)
அதன் பின் ஒரு நாள் சாருவை அறை எண் கடவுள் படம் பார்க்கலாமா ? என்று ஒரு மெயில் (பயந்துகொண்டே... என்ன பயம் ? ஒரு முறை ஜெயகாந்தனை சங்கீதா ஹோட்டல் வாசலில் பார்த்து , அப்படியே ஓ ரமாக க் கை கட்டி நின்று கொண்டு அவர் போகும் வரை பார்த்துக் கொண்டிருந்தேன். பயம் இல்லை... ஒரு மரியாதை....கூச்சம் .... தெரியலை :) உடனே பதில்...... " நான் பார்த்து விட்டேன். படம் bore என்று. இது போதுமே எனக்கு.
சரி இப்போ எதுக்கு இப்போ இந்த மெயில் ?
சாரு... உங்க புத்தகத்துக்காக சிட்டி சென்டர் லேண்ட் மார்க்கில் தேடிய போது கிடைத்தது , " ஊரின் மிக அழகான பெண்" மட்டுமே. ராஸ லீலா , ஸீரோ டிகிரி கிடைக்கவில்லை.....(நல்லதாப் போச்சு). நேரே சாரு கிட்டேயே கேட்கலாம்.
சாருவுக்கு எழுதுவது தான் வேலை. புத்தகம் வேண்டும் என்றால் உயிர்மையில் வாங்கிக் கொள்.....
இதை சாக்கிட்டு சாருவைப் பார்க்கலாமே என்று தான்... ; நேரில் பார்த்தால் இது போல எல்லாம் ரொம்ப மொக்கைப் போட மாட்டேன்.....
அன்புடன்
மெளலி.