( Blue Moon Hotal, Lima, Peru )
அன்புள்ள சாரு
திரு.கண்ணனுக்கு எழுதிய கடிதத்தில் நான் தங்களை மண்ணைக் கவ்வ வைத்து சந்தோஷப்பட்டதாக எழுதியிருப்பது பார்த்தேன் மிகவும் வேதனையாக இருந்தது அதில் நான் குறிப்பிட்ட கேள்விகளுக்கு பதில் எழுதாமல் விட்டதற்கு பல காரணங்கள் இருக்கலாம் , உங்களின் எழுத்துச் சுமை , அல்லது எனது புரிந்துகொள்ளும் திறனின் மீதான தங்களின் அவநம்பிக்கை. அதை நான் புரிந்துகொள்கிறேன். நான் தங்கள் மீது எவ்வளவு மரியாதை வைத்திருக்கிறேன் என்பது உங்களுக்குப் புரிய நியாயமில்லை. உங்களை மண்ணைக் கவ்வ வைப்பதில் என்ன பெருமை இருக்கிறது மனிதனை மனிதன் இழிவுபடுத்துகிற கீழ்த்தரமான சிந்தனைகளை உங்கள் எழுத்து எனக்குப் படிப்பித்திருக்கும் என நம்புகீறீர்களா நீங்கள் ? உண்மையில் உங்கள் எழுத்துதான் என்னைப் பல வகைகளில் பக்குவப்படுத்தியிருக்கிறது இதெல்லாம் முகஸ்துதிக்காக எழுதப்படுவதில்லை , தங்களின் ஸீரோ டிகிரி நாவலை எனக்கு அறிமுகப்படுத்திய எனது உதவியாளரை இன்றும் ஒரு மிகப்பெரிய மரியாதையுடன் நண்பராய்ப் பழகி வருகிறேன் அதன் காரணம் தங்களின் ஸீரோ டிகிரி தந்த பாதிப்புதான் என்பதை அறிவீர்கள ? இதெல்லாம் என்னைப் பற்றிய தவறான புரிதலை அகற்றுவதற்காக எழுத வேண்டியிருக்கிறது மன்னியுங்கள் தங்களைப் புண்படுத்தியிருந்தால்.
அன்புடன் செல்வன்
துபாய்
28.7.2008,
* * *
அன்புள்ள செல்வன் ,
என்னை நீங்கள் பாமரனோடு ஒப்பிட்டு இருந்ததால் மன வேதனை கொண்டு எழுதிவிட்டேன். உங்களைப் புண்படுத்த அல்ல.
கடிதத்தைத் தாமதமாக பதிவேற்றம் செய்கிறேன். நிறைய field work. வேறொன்றும் இல்லை.
சாரு
* * *