கடிதம்

 

 

அன்புள்ள சாரு

இது நான் எழுதும் முதல் கடிதம் (நம்புங்கள். அலுவல் தவிர்த்து நான் யாருக்கும் கடிதம் எழுதியதே இல்லை). அதனால் தானோ என்னவோ என்ன எழுதுவதென்றே தெரியவில்லை.

நான் உங்களின் வெறித்தனமான ரசிகன் (சமீப காலமாக). தினசரி காலையில் என் அலுவலக கணினியை துவக்கியவுடன் உங்கள் சாரு ஆன்லைன் பார்த்துவிட்டே மற்ற வேலைகளைப் பார்ப்பது என் வழக்கம். 19-ம் தேதிக்கு பிறகு இரண்டு நாட்களாக ஒரு அப்டேட்டும் இல்லை என்றதும் எனக்கு வேலை ஓட மறுக்கிறது.

என்னவாயிற்று சாரு? இங்கே (ருவாண்டாவில்) எங்களுக்கு கிடைக்கும் மிகச்சில சந்தோஷங்களில் ஒன்று உங்களது எழுத்து. எங்களின் மிகச்சிறிய தமிழ் சங்கத்தில் உங்களது தசாவதாரம் விமர்சனத்தை அடியேன் (இது கூட உங்களிடம் கற்ற வார்த்தை தான்) வாசித்து காட்டினேன் என்பதை மிகப் பெருமையுடன் சொல்லிக் கொள்கிறேன்.

(அந்த விதத்தில் உங்களின் வாசகர் கூட்டத்தில் இன்னும் ஒரு 40 பேரைசேர்த்து விட்ட சந்தோசம் எனக்கு). உங்களிடத்தில் ஒரு சிறிய விண்ணப்பம்.தயவு செய்து உங்கள் வெப்சைட் ஐ தினமும் அப்டேட் செய்யுங்கள். வேறு எந்த விதத்திலும் நாங்கள் உங்கள் எழுத்துக்களை படிக்க முடியாது.

மிக்க அன்புடன்
சுந்தர்
ருவாண்டா (மத்திய கிழக்கு ஆப்ரிக்கா)