கடிதம்

 

 

நண்பா,

நீண்ட நாட்களாக உனக்கு ஒரு கடிதம் எழுத ஆசை. என் நெருங்கிய நண்பன்(2 லட்சம் ஹிட்ஸ் வாசகன்) உன் Bangalore வாசகர் சந்திப்பில் கலந்து கொள்ள உன்னிடம் அனுமதி வாங்கி இருந்தான். நானும் சேர்ந்து வரலாம் என்று நினைத்திருந்தேன். அனுமதி வாங்காமல் வந்தால் திட்டி விடுவாயோ என்று ஒரு சின்ன பயம் :) .நான் சென்னையில் தான் இருக்கிறேன். உன்னை சந்திக்க ஆவல், நீ அனுமதித்தால்.

எதற்கு?

ஒரு சக நண்பனை பார்க்கும் ஆவல். கனவுகளையும், கற்பனைகளையும், அபத்தங்களையும் பதிவு செய்து கொண்டிருப்போருக்கு நடுவில்... உண்மையை... நிர்வாணமாய் எழுதும் ஒரு சிறந்த படைப்பாளியை பார்க்கும் ஆவல்.

உன் எழுத்தின் சுவையிலும், உண்மைத்தன்மையிலும் மயங்கியோரில் நானும் ஒருவன். என் அலைவரிசை நண்பன் ஒருவன் அனுபவத்தை பகிர்ந்துகொள்வது போலிருந்தது உன் ராஸலீலாவை படிக்கும் போது. உன் ராஸலீலா படித்தது , ரசித்தது பற்றி நான் எழுத ஆரம்பித்தால் உன் பெரும் மதிப்பு மிக்க உன் நேரத்தை வீணடித்தவனாகி விடுவேன் (உனக்கு தொல்லை கொடுத்தோர் லிஸ்ட்டில் என்னையும் சேர்த்துவிடுவாய்).

உன் எழுத்துக்களை என் சக நண்பர்களுக்கும், சக பணியாளர்களுக்கும் அறிமுகம் செய்து கொண்டிருக்கிறேன் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம். எல்லோருக்கும் உன் எழுத்து பிடித்திருக்கிறது. ஆனால் நிறைய பேருக்கு உன் எழுத்து அறிமுகம் இல்லை. இன்னும் சில வருடங்களில் மிக அதிகமானோர் உன் எழுத்தை சித்துக்கொண்டிருப்பார்கள். நிச்சயம் பாரதிக்கு ஏற்பட்ட நிலை உனக்கு வராது.

பி.கு. : உன்னை ஒருமையில் பேசுவதற்கு மன்னிக்கவும் (கோபப்படமாட்டீர் என்ற ஒரு நம்பிக்கை). உன்னைவிட வயதில் மிகவும் சிறியவன் நான் ஆனால் ஒருமையில் உன்னை அழைப்பது ஒரு நெருக்கமான நண்பனாக உன்னை உணர்ந்து கொள்வதற்கே...

நட்புடன்,
இக்னேசியஸ்.
7.8.2008