சாருவுடன் பெங்களூரில்

 

 

முன்குறிப்பு :

மின்னஞ்சல் மூலம் பெங்களூர் வாசகர் சந்திப்பிற்கு வருகிறேன் என சாரு நிவேதிதாவிற்குத் தெரியப்படுத்தி , பதில் பெற்று , சென்னையிலிருந்து காரில் நானும் , நீதிமணியும் வேலூர் வரை சென்று , அங்கே கோபாலை ஏற்றிக் கொண்டு மாலை 6.00 மணிக்கு ஓசூர் வந்து சேர்ந்தோம் . பெங்களூரில் ராயல் ஆர்ச்சிட்-ஐ அடைய இரவு 8.30 ஆனது . நம்புங்கள் , வேலூரிலிருந்து 4.30 மணிக்கு கிளம்பினோம் .

Over to Royal Orchid.

ராயல் ஆர்ச்சிட்-இல் வழுவழுப்பான வெண்புகை சூழ்ந்த இடத்தில் காரை பார்க் செய்த பிறகு ரிசப்ஷன் வந்து ' சாரு எங்கிருக்கிறார் ? ' என கேட்டு வந்தால் ..

சாரு கோபமாக அமர்ந்திருக்கிறார். ஒன்றிரண்டு பேர் ஓரமாக .. பம்மிக்கொண்டு அமர்ந்திருக்கின்றனர் ..

நான் நடுங்கிக்கொண்டு .. “ மாலை வணக்கம் சாரு ..” என்கிறேன்.

சாரு “ இடியட் .. ஏன் மாலைக்கு வணக்கம் ?..Evening க்கு வணக்கமா ? அல்லது .. கழுத்தில் அணியும் மாலைக்கு வணக்கமா ?” என்று கூறி அருகில் அழைத்து முட்டி போட வைத்து தலையில் ஒரு குட்டு குட்டினார்.

“ சாரு , உங்கள் 2,00,000 ஹிட்ஸுக்கு வாழ்த்துக்கள் ! ”

“ நான் எங்கே இரண்டு லட்சம் ஹிட்ஸ் குடுத்தேன் ? சினிமா ஹிட் குடுத்தேனா ? ம்யூஸிக் ஹிட் குடுத்தேனா ? அல்லது , என் நாவலாவது இரண்டு லட்சம் பிரதிகள் விற்றதா ? என்ன உளறுகிறீர் ?

“ மன்னித்துக் கொள்ளுங்கள் சாரு. நான் சொல்ல வந்தது என்னவென்றால் ... ”

“ சொல்ல வந்தது ஒன்று .. .சொன்னது வேறா ?

” இல்லை .. . இல்லை ”.

“ இல்லை என்ற சொல்லே எனக்குப் பிடிக்காது .. . அதுவும் இரண்டு முறை வேறா ?”

“ அய்யோ .. என்னை பேசவிடுங்கள் சாரு... ”

“ நீங்கள் பெசுவதற்காக நான் என் உயிரையும் கொடுப்பேன் .. என்னைப் போய் பேசவிடுங்கள் என்று கூறுகிறீர்களே .. .இதற்கு நீங்கள் என்னைக் கொலை செய்திருக்கலாம் .”

“ என்ன இழவு வாசகர் சந்திப்புடா இது ?. இதற்குத்தான் இவரை எட்டு வருடம் பார்க்காமலே இருந்தோம் ..”

“ டேய் ஹோட்டல் வந்துவிட்டது எழுந்திரு ” என நண்பர்கள் எழுப்பினார்கள் .. . ' ஓஹோ, கனவுதான் இது! ' என்றெல்லாம் உங்களை காமெடி பண்ண விரும்பவில்லை ... நிஜம்தான் .

நிஜமா ?

ஆம் !

நிஜமாகவே இப்படித்தான் நினைத்துக் கொண்டு வந்து கொண்டிருந்தேன் ... ஆனால் அதைக் கடைசியில் எழுதுகிறேன்.

உண்மையில் நான் சென்றபோது ரிசப்ஷனில் உள்ள பெண் ' சாருவைப் பார்க்க வந்தீர்களா ?' என்று கேட்டு மகிழ்ந்து என்னை அணைத்து முத்தமிட்டு என்னுடன் பறந்து வந்து ஆறாவது மாடியில் இறக்கி விட்டுச் சென்றாள் .

நாங்கள் 90 நிமிடம் லேட்...

சாரு , மற்றும் சுமார் 25 பேர் பேசிக் கொண்டு இருந்தனர் .

சாரு வரவேற்றார் ! ஆம் !

குரு , ” டின்னர் வேண்டுமென்றால் அங்கே இருக்கிறது ” என்றார். குரு தான் இந்தச் சந்திப்பை ஏற்பாடு செய்திருப்பவர். (60,00 ரூபாயாம் ).

ஸ்ரீவில்லிபுத்தூர் ராகவன் , தங்கவேல் , குரு ஆகியோரை சந்தித்தோம்.

செங்கிஸ்கான் , மூளை , IT , morality, குமுதம் - கோணல் பக்கங்கள் , நாகரிகம் , பணம் ஆகியவற்றை ஓடும் காற்றாற்றில் விட்டு அலசி காயப் போட்டு விட்டார்கள் நமது வாசகர்கள் , ராயல் ஆர்ச்சிட்-இன் 6 வது மாடியில். .

Pool side -இல் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. யாரேனும் வாதம் முற்றி தள்ளி விட்டு விடப் போகிறார்கள் என்கிற பயமில்லாமல் நீச்சல் குளத்தை ஒட்டிய ஆசனத்தில் அமர்ந்திருந்தார் சாரு !. சற்று தொலைவில் Bacardi, Smirnoff, Beer & Soft Drinks.

பேரர் side dish மட்டும் கொண்டு வந்து கொடுப்பார். நாம்தான் சென்று சரக்கை எடுத்துக் கொள்ள வேண்டும். எத்தனை லார்ஜ் வேண்டுமானாலும் குடிக்கலாம். லிமிட் எதுவும் இல்லை.

வாசகர்கள் அரைவட்டமாகச் சுற்றி அமர்ந்திருந்தனர். சாருவின் குரலை சற்றே குறைப்பதற்காக ஒரு மைக் கொடுத்திருந்தனர். சிறிது நேரம் அதில் பேசினார். பின் அதைத் தூக்கிப் போட்டு விட்டார்

வாசகர்கள் கேள்வி கேட்டு சாரு பதில் கூறிக் கொண்டு இருந்தார். விவாதம் சற்று சீரியசாகவே சென்றது. நேரம் ஆக ஆக ஒரு கேள்வியே முப்பது நிமிடம் எல்லாம் கேட்டார்கள். பிறகு பதில் ? கேள்வி புரிந்தால்தானே ? புரிந்தாலும் முப்பது நிமிடக் கேள்விக்கு எவ்வளவு நேரம் பதில் சொல்ல வேண்டும் ! யோசித்துப்பாருங்கள்.

பின் சாருவை ஒதுக்கி விட்டு நாங்கள் ( வாசகர்கள் ) சற்று நேரம் பேசிக்கொண்டு இருந்தோம்

அப்பாடா என்று இருந்தது சாருவிற்கு !

இந்தச் சந்திப்பிற்கு முன்பே 15 கேள்விகளைக் கொடுத்து , இந்தக் கேள்விகளையெல்லாம் கேட்கக் கூடாது என்று சொல்லியிருந்தார் சாரு.

விடுவோமா நாங்கள் ? அதைவிட ‘ நெம்ப ’ கேவலமான கேள்விகளைக் கேட்டு கலக்கி விட்டோம் கலக்கி .

மணி பத்தரை ஆனதும் குரு பார் மேனேஜர் போன்று வந்தார் . ' லாஸ்ட் ஆர்டர்' என்று ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார் .

சாரு ரெஸ்ட் ரூம் சென்று வருகிறேன் என சென்றதும் , ஒரு வாசகர் “ என்ன போதையாகி விட்டாரா ?” என வருத்தத்துடன் , கலக்கத்துடன் கேட்டார் . வரும்போதே

' சாரு மதியத்திலிருந்து குடித்து , சாப்பிட்டு , மிதமான , நல்ல போதையோடுதான் வந்தார் ; நாம்தான் பல கேள்விகளை கேட்டு , நாமே அதிகமாக , சீரியஸாக பேசி , அவர் போதையை இறக்கி விட்டோம் ; அதுதான் இப்படி இருக்கிறார் ' என நினைத்துக் கொண்டேன். பின் அனைவரும் உணவு சாப்பிட , சாரு தயிர் சாதம் சாப்பிட விழா இனிதே முடிந்தது .

சில சந்தேகங்கள்

1.இந்தச் சந்திப்பை குரு மிகப் பிரமாதமாக ஏற்பாடு செய்திருந்தார் . விழா செலவு முழுக்க அவரே ! கிளம்பும் போது ‘ எவ்வளவு ஆனது ?' என்று கேட்டேன் . ” 45,000 க்கு பில் வந்துள்ளது ” என்றார். மொத்தச் செலவு 60,000 இருக்கலாம்.

விழாவிற்கு வந்தவர்கள் , ' யார் இந்த விழாவை ஏற்பாடு செய்தது ?' என விசாரிக்கக் கூட இல்லை. ஒரு பேச்சுக்காகக் கூட நன்றி தெரிவிக்கவில்லை.

ஒருவேளை முன்பே தெரிவித்து இருக்கலாம் . அது எனக்குத் தெரியாமல் இருந்திருக்கலாம். ஏனெனில் , நான் 90 நிமிடம் தாமதம்.

2. சரக்கு அன்லிமிடெட். எவ்வளவு வேண்டுமானாலும் குடிக்கலாம். நான் கடைசியாக ஒரு ரவுண்ட் பகார்டி கலந்து வைத்துவிட்டு சாருவுடன் பேசிக்கொண்டு இருந்தேன். சற்று நேரம் கழித்துப் பார்த்தால் என் க்ளாஸில் அரை கிளாஸ் காலி. எந்த நண்பர் என்று தெரியவில்லை. ஏனென்றும் தெரியவில்லை..

அனைவரும் மிகக் கம்மியாகவே குடித்தனர். என்னையும் குருவையும் , சாருவையும் தவிர்த்து . வாழ்க !

ஒரு ஆச்சரியம்

விழாவிற்கு வந்த அனைவரையும் விட ரூமிலேயே குடித்துவிட்டு flat ஆகி விழாவிற்கே வராமல் போன மும்பை சூர்யாதான் அன்றைய தின ஸ்டார் ஆகிப் போனார் !. அவர் மும்பையிலிருந்து இந்தச் சந்திப்பிற்காகவே வந்திருந்தார்.

மிகமிகக் குறைவானவர்களே புகை பிடித்தனர்

சாருவைப்பற்றி

சாருவின் எழுத்தைப் படித்து , மற்றும் பலருடன் அவருக்கு ஏற்பட்ட அனுபவங்களைப் படித்து , சாரு ஒரு கோபக்காரர் ; அவர் ஒரு தனி உலகில் வாழ்கிறார்-அவருக்கான நியாயங்களுடன் ; நாம் அவரைப் பார்த்துப் பேசினால் கோபப்படுவார் , திட்டுவார் ; நான் ஒன்றைப் பேசினால் கம்யூனிகேஷன் பிரச்சினையால் அவர் என்னைத் தவறாக புரிந்து கொண்டு ' சாரு ஆன்லைனில் “ நெம்ப நெம்ப ” கேவலமாகத் திட்டி அசிங்கப்படுத்தி விடுவார் என எண்ணிக்கொண்டே , கிட்டத்தட்ட கடந்த எட்டு வருடங்களாக அவரைப் பார்க்க நினைத்தும் பார்க்காமலேயே இருந்து வந்துள்ளேன் . சென்ற முறை நடந்த புத்தகக் கண்காட்சியிலும் , அவரை பார்த்துவிட்டும் சந்திக்காமலேயே வந்துவிட்டேன் .

ஆனால் நேரில் மிக சாதாரணமாக , எளிமையாக , மிகப் பொறுமையாக , சகிப்புத்தன்மையோடு இருந்தார் . பெங்களூர் சந்திப்பு முடிந்ததும் இரண்டு நாட்கள் , அவருடனேயே பெங்களூரில் இருந்தோம் . அப்போது நாங்கள் மிக இயல்பாக ரொம்ப நாட்கள் பழகின நண்பருடன் , பேசுவது போல கேஷுவலாகப் பேசிக்கொண்டிருந்தோம் .

எங்களின் அசட்டுத்தனமான , பைத்தியக்காரத்தனமான , காமெடியான எந்தப் பேச்சுக்கும் கோபப்படாமல் எங்களோடேயே இருந்தார் .

“ டீ சாப்பிடப் போகலாம் ; வாருங்கள் சாரு ” என்பேன்.

“coffee day போகலாமே ? ” என்பார் சார்.

“ தெருவோர டீக்கடைக்குப் போகலாம் சாரு .” இது நான்.

“ சரி , அங்கேயே போகலாம். ”

இதுதான் , இப்படித்தான் சாரு அனைத்து விஷயங்களிலும் இருக்கிறார் .

பிறகுதான் ‘ இப்படிப்பட்ட ஆளையே கொந்தளித்துப் போய் எழுதும் அளவிற்கு ஆக்கியிருந்தார்களே சில ஆட்கள்! ' என வியந்தோம்.

சாருவை ரயிலேற்றி விட்டு ஒரு வாரம் கழித்து சென்னையில் சவேராவில் சந்தித்தபோது , ” நாம் சந்தித்து ஒருவாரம் ஆகிவிட்டது அல்லவா ?” என்றார்.

நான் மனதிற்குள் ” நாம் முதல் முறை சந்திப்பதற்கே எட்டு வருடம் ஆகிவிட்டதே. இரண்டாம் சந்திப்புக்கு இந்த ஒரு வாரம் பரவாயில்லை !” என்று நினைத்துக் கொண்டேன்.

குரு

விழா அமைப்பாளர் , virgin என்று சொன்னார் . ” இந்தியாவைத் தவிர வேறெங்கும் இப்படிச் சொல்லாதீர்கள் , விழுந்து விழுந்து சிரிப்பார்கள் ” என்று கூறி அவருக்கு நான் பரிந்துரைத்தது .“ ஒரு virgin மொபைல் வாங்கிக்கொள்ளுங்கள் . Virgin atlantic- ல் ஓர் டிக்கட் போட்டு U.S சென்று அங்கு ஒரு ஆறு மாத படிப்பாவது படியுங்கள் ஓக்கலமா university- ல் ”.

முடிவுரை :

மிகச் சிறப்பான விழா ! வாசகர்களாகிய நாம் மனது வைத்திருந்தால் இந்தச் சந்திப்பை இன்னும் பெரிய கொண்டாட்டமாக மாற்றி இருக்க முடியும் . 5,000,00 hits விழாவின் போது மனது வைப்போமாக !

- ஸ்ரீனிவாசன் - சென்னை