சாரு அவர்களுக்கு,
தினமலரில் உங்கள் கட்டுரையைப் படித்து விட்டு கண்மூடித்தனமான் ரஜினி ரசிகர்களிடம் ( நண்பர்கள்தான் ) படிக்கக் கொடுத்தேன். அதற்கு முந்திய தினம் நான் என் நண்பனிடம் வாதாடிய போது ரஜினியின் ஆன்மீகமும் , வன்முறையாளர் போன்ற பேச்சும் , அதே மேடையில் கமல் பேசிய பொறுப்பான பேச்சும் பற்றி ஒப்பிட்டுப் பேசினேன். ஞாயிறு அன்று உங்கள் கட்டுரையில் அது miss ஆவது தெரிந்தது. பின்னர்தான் " வினை விதைத்தவன் வினை அறுப்பான் " மூலம் தெரிந்து கொண்டேன். மிக அற்புதம்.
அப்புறம் கனிமொழி. அவரிடம் சரியான கேள்வி எழுப்பி உள்ளீர்கள். இன்னொரு விஷயத்தையும் கேளுங்கள். அவரிடம் நீங்கள்தான் கேட்க முடியும். அந்தச் செய்தியின் கடைசியில் அவர் ஒரு பன்ச் அடித்தார். அதைப் படித்துத்தான் படம் சூப்பராக இருக்கும் என்று நினைத்துப் போனேன்.
நீங்கள் சொல்வது போல் சிரிப்பு மட்டும் அல்ல. அருமையான கதையை ரஜினி என்பவருக்காக குப்பை ஆக்கிவிட்டார்கள் என்று கோபமாக இருந்தது. வெயில் பார்த்திருப்பீர்கள். விளையாடி இருப்பார் பசுபதி. இதில் பாவம் .... ஷூட்டிங்கில் எதிரே யாரோ நின்று கொண்டு ' அளவா நடி பசுபதி ' என்று கூறியதைப் போல் பயந்து பயந்து நடித்திருக்கிறார். பாவம்.
அது சரி. கனிமொழி அடித்த பன்ச் ....
" படம் நன்றாக இருக்கிறது. கிளைமாக்ஸ் காட்சியில் என்னையறியாமல் அழுதுவிட்டேன் " .:)) ( தினமணி செய்தி )
விஷயம் உள்ளவர் இப்படிச் சொல்லலாமா ?
.
அன்புடன்
ரகு