கேள்வி பதில்

 

சாரு
உங்கள் எழுத்துக்களைப் படித்து வருகிறேன். உங்கள் எழுத்து , ஆண் மகன் தன் மனைவி உடன் அல்லது பிற பெண்கள் விருப்பட்டால் பிற பெண்களுடன் கலவி கொள்வது தவறில்லை எனும் மனப்போக்கில் உள்ளது .அதே வேளையில் ஒருவரின் மனைவி பிற ஆண்களுடன் கலவி கொள்ள ஆண்மக்களான கணவர்களால் பொறுத்துக் கொள்ள முடியுமா ?

(பிச்சுமணீ)

இவ்ளோ கஷ்டமான கேள்வியெல்லாம் கேட்டால் நான் என்ன செய்வது பிச்சுமணி?

நான் எங்கேயும் தவறு தவறில்லை என்பது பற்றிப் பேசுவதே இல்லை. அதெல்லாம் நீதிமான்களின் வேலை. என்னைப் பொறுத்தவரை எது எதார்த்தம், எது மனித இயல்பு என்பதுதான் முக்கியம்.

ஒரு ஆணோ, பெண்ணோ அந்நியரை ரசிக்கும் நோக்கில் ஏறெடுத்துப் பார்த்தாலே அது விபச்சாரம் என்கிறது விவிலியம். ஆனால் இப்போது ‘சைட் ’ அடிக்காத ஆணோ பெண்ணோ ஒருவர் கூட இல்லை போல் தெரிகிறது.

ஆங்கிலத்தில் cuckold என்று தனியாக ஒரு வார்த்தையே இருக்கிறது. இது பற்றி ஒரு முதுமொழியும் உண்டு. A cuckold is the last person to know that he has been cuckolded. ஷேக்ஸ்பியரின் ஆண்டனியும் க்ளியோபாத்ரா நாடகத்தின் முதல் அங்கம் இரண்டாவது காட்சியில் இந்த வார்த்தையைப் பயன்படுத்துகிறார். இதோ:

ALEXAS

Lo, now, if it lay in their hands to make me a cuckold, they would make themselves whores, but they'ld do't!

* * *