( Charu Nivedita with Srivilliputhur Raghavan )
கேள்வி: உங்கள் எழுத்தைப் படித்து உங்கள் மனைவி ஒன்றும் சொல்வதில்லையா ?
பதில் : அசப்பில் ஜெயப்ரதா மாதிரி இருப்பாள் அவந்திகா - என் மனைவி . இப்போது யோகா , தியானம் எல்லாம் செய்து அஸின் மாதிரி மெலிந்தும் விட்டாள். அதனால் இதுவரை ஜீன்ஸ், டீஷர்ட் என்று கலக்கிக் கொண்டிருந்தவள் இப்போது ஸ்கர்ட்! ‘ ஷிஹான் ஹுசேனியிடம் சொல்லி இரண்டு பாதுகாப்பு வீரர்களோடு வெளியே போ ’ என்று அட்வைஸ் கொடுத்தேன். தோற்றத்தில் இப்படி இருந்தாலும் உள்ளத்தில் அச்சு அசல் காரைக்கால் அம்மையார்! ரமணர், பரமஹம்சர், ஷீர்டி பாபா போன்றவர்களின் சத் சரிதங்களை மட்டுமே படிப்பாள். இதுவரை என்னுடைய எழுத்து எதையுமே படித்ததில்லை!
( இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு குமுதத்தில் வெளிவந்த கேள்வி பதில்)
***
|