நேற்றிரவு ஒரு நண்பருடன் உரையாடினேன் . கோவையை ச் சேர்ந்தவர் இரண்டுதினங்களுக்கு முன் பு தான் மின்னஞ்சல் வழியே பரிச்சயம் . நீண்ட நேரம் பேசினார் . பின்னர் உங்களின் ஸீ ரோ டிகிரிபற்றியும் உங்களை எட்டு வருடங்களுக்கு முன்னர் சந்தி த் தது பற்றியும் பேசினார் .
உங்களை ச் சந்தித்தபொழுது காலில் விழுந்து கும்பிட்டாராம் நீங்கள் சிரித்தீர்களாம் . அன்றே உங்களை த் தொலைதொடர்பு கொண்டு எனக்கு மரியாதை இப்படித்தான் செய்யத்தெரியும் ( நீங்கள் அவரின் குரு என்று குறிப்பிட்டார் ) . நீங்கள் எப்படி எதிர்பார்க்கிறீர்கள் என்பது தெரியாது அப்படிச் சொன்னால் அதன்படி செய்கிறேன் என்று சொன்னதாகவும் பின்னர் ஓரி ரு முறை தொலைதொடர்பு கொண்டு நீங்கள் விரும்பாததால் அதன்பின்னர் தொடர்பு கொள்ளவில்லையாம் .
பேசும்பொழுது உங்க ளிடம் சில கேள்விகளை வைத்ததார்
அதனை உங்களிடமே கேட்டுவிடலாம் என்று தோன்றியது
1. எனக்கு ஜே . ஜே சில குறிப்புகளும் பிடித்திருக்கிறது ஸீ ரோ டிகிரியும் பிடித்திருக்கிறது ஏன் சாருவிற்கு ஜே . ஜே . சில குறிப்புகளை பிடிக்கவில்லை என்று வினவினார் . ( பலரும் கேட்ட கேள்வியாக இருக்கலாம் )
( நேற்று உங்களின் இணையபக்கத்தில் வாசிக்கும் பொழுது நான் போக்கிரியை பற்றி எழுதினேனா வெயிலைப் பற்றி த் தானே எழுதினேன் என்று குறிப்பிட்டிருந்தீர்கள் அந்த அடிப்படையிலேயே ஜே . ஜே சில குறிப்புகளையும் எடுத்துக்கொள்ளலாமா என்று தோன்றியது )
2. நிஷாந்த் (1975) ( விஜய் டெண்டுல்கர் திரைக்கதை ) என்ற இந்தி திரைப்படத்தை நீங்கள் ஸீ ரோ டிகிரி எழுதுவதற்கு முன்பு பார்த்திருக்கிறாரா என்று தெரியவில்லை அந்த திரைப்படத்தின் தாக்கம் ஸீ ரோ டிகிரியில் இருப்பதாக க் கூறினார்
( கடந்த 5 ஆண்டுகளாகத்தான் எனக்கு இந்தி திரைப்படம் பரிச்சயம் . சிங்கப்பூர் வந்தபின்பு அதுவும் குறைந்துவிட்டது தாரே ஜமீன் பர் பார்த்ததோடு சரி . நிஷாந்த் திரைப்படத்தை ப் பார்க்கவேண்டும் என்கிற ஆவல் எழுந்துள்ளது )
3. ஏன் சாரு சினிமா துறைக்குள் செல்லவில்லை ( பலரும் கேட்ட ஒரு கேள்வியாகவே இருக்கலாம் ) போகக்கூடாது என்பதில் தீவிரமாக அல்லது பிடிவாதமாக இருக்கிறரா என்று வினவினார் ( திரை த் துறைக்குள் சென்றால் குறிப்பிட த் தக்க ஒருபிரிவில் சாருவின் தாக்கம் நிலைத்திருக்கும் என்றும் ஆதங்கப்பட்டார் )
4. கலைத்துபோடப்பட்ட ஸீ ரோ டிகிரியை எந்த ஒரு இடத்திலிருந்தும் முன்னும்பின்னும் தொடர்புபடுத்தி வாசிக்கமுடிகிறது என்றும் , உங்களின் தங்கைக்காக வே அது எழுதப்பட்டதாக த் தோன்றிய தாகவும் சொன்னார்.
பாண்டித்துரை
சிங்கப்பூர்
பதில்: காலில் விழுந்து வணங்கியது ஞாபகம் உள்ளது. யாராவது காலில் விழுந்து வணங்கும் போது சிரிப்பார்களா? நான் ஒன்றும் அந்த அளவுக்கு கடுஞ்சித்தம் கொண்டவன் அல்ல. பதறினேன். அதெல்லாம் மாபெரும் ஞானிகளுக்குத் தரப்பட வேண்டிய மரியாதை அல்லவா என்று பதறினேன். அவ்வளவுதான்.
மேலும், யாரையும் நானாகத் தவிர்ப்பது கிடையாது. அதுவும் என் மீது அபரிமிதமான மரியாதை கொண்டுள்ள ஒரு மனிதரை நான் தவிர்ப்பேனா? அவருக்கு அப்படித் தோன்றியிருக்கலாம். மற்றபடி நான் மிகவும் சிநேகபூர்வமானவன் தான்.
ஜே.ஜே. சில குறிப்புகள்: சிலருக்கு சில விநோதமான பழக்கங்கள் இருக்கலாம். அப்படி ஒரு விநோதம்தான் அந்த நண்பருக்கு என்னையும் பிடித்திருக்கிறது; சு.ராவையும் பிடித்திருக்கிறது என்பதும். விடுங்கள். இது பற்றியெல்லாம் ரொம்பவும் மண்டையைப் போட்டுக் குழப்பிக் கொள்ளக் கூடாது. மற்றபடி அந்த நாவல் பற்றி என்னுடைய விமர்சனக் கட்டுரை ஒன்று உள்ளது. வரம்பு மீறிய பிரதிகள் என்ற நூலில் அக்கட்டுரை இடம் பெற்றுள்ளது. அதைப் படித்துப் பார்க்கவும்.
நிஷாந்த் பார்த்திருக்கிறேன். என்னை பாதித்த எழுத்தாளர்கள், சினிமா பற்றியெல்லாம் என்னுடைய நேர்காணல்களில் அதிகமாகவே எழுதியிருக்கிறேன்.
சினிமாத் துறைக்குள் நுழைய மாட்டேன் என்று நானா சொன்னேன்.? சமீபத்தில் கூட வசந்த பாலனிடம் ‘ என்னுடைய நடிப்பு வாய்ப்பு என்னாயிற்று? ’ என்று கேட்டேன். ‘ நீங்கள் ஹீரோ சான்ஸ் அல்லவா கேட்டிருக்கிறீர்கள்? யோசிக்கிறேன் ’ என்று சொல்லியிருக்கிறார். விஜய காந்த் ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கும் போதே நானும் நுழைந்து விட வேண்டும். அப்போதுதான் கொஞ்சம் தோதாக இருக்கும்.
இயக்குனராக நுழைந்து சில வேலைகளைச் செய்யலாம். அதற்குத் தயாரிப்பாளர் வேண்டுமே?
உங்கள் நண்பரின் நான்காவது கேள்விக்கு நாவலிலேயே பதில் இருக்கிறது.
22.8.2008.
6.00 a.m.
* * *